உலகம்

அமெரிக்காவில் கொத்து கொத்துக்காக சூறையாடும் கொரோனா..! ஒரே நாளில் 24,000 பேர் பாதிப்பு.

Summary:

Most of the American people affected by the corona

சீனாவில் உஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனோ வைரஸின் கோரத்தாண்டவம் இன்று பல நாடுகளிலும் பரவி தனது கோர முகத்தை காட்டி வருகிறது. முதலில் சீனாவில் கொத்து கொத்தாக மக்களை பலி வாங்கியதை அடுத்து இத்தாலியில் அதையும் விட அதிகமான மக்களை குறைந்த நாட்களிலேயே பலி வாங்கியது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் அடுத்த படியாக வல்லரசு நாடான அமெரிக்காவை பயங்கரமாக தாக்கி வருகிறது. தற்போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் அமெரிக்கா தான் முதல் இடத்தில் இருந்து வருகிறது.

அமெரிக்காவில் கொரோனா வைரஸால் இதுவரை 1,88, 435 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4000த்தும் மேலாக அதிகரித்துள்ளது. தற்போது அமெரிக்க மக்களையும் கொரோனா வைரஸ் கொத்து கொத்தாக பலி வாங்கி வருகிறது. 

அதுமட்டுமின்றி அமெரிக்காவில் ஒரே நாளில் 24,000 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ஒரே நாளில் இந்நோயால் 873 பேர் உயிரிழந்துள்ளனர். 


Advertisement