அடேங்கப்பா! 778 கோடிக்கு ஏலம் போன ஓவியம்! அப்படி என்னதான் இருக்கு? புகைப்படம்!

அடேங்கப்பா! 778 கோடிக்கு ஏலம் போன ஓவியம்! அப்படி என்னதான் இருக்கு? புகைப்படம்!


Monet painting sold for 778 crores

சில ஓவியங்கள் பலகோடி ரூபாய்க்கு ஏலம் போனதாக நாம் கேள்விப்பட்டிருப்போம். அந்த வகையில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற ஓவியர் கிளாட் மொனெட். இவரின் ஓவியங்கள் மிகவும் தனித்தன்மை வாய்ந்தவையாக கருதப்படுகிறது. பல்வேறு ஓவியங்கள் வரைந்த கிளாட் மொனெட் தனது 86ஆம் வயதில், 1926ஆம் ஆண்டு காலமானார். 

இவர் இறப்பதற்கு முன்னர் அதாவது 1890 ஆம் ஆண்டு கிராமப்புற மக்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு வைக்கோல் ஓவியம் என்ற தலைப்பில் ஒரு ஓவியம் ஒன்றை வரைந்தார். இந்த ஓவியத்திற்கு மீலெஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த ஓவியம் சிலபல காரணங்களுக்காக ஏலத்திற்கு விடப்பட்டது. சுமார் 8 நிமிடங்கள் வரை நடந்த இந்த ஏலத்தில்  கிளாட் மொனெட் வரைந்த வைக்கோல் ஓவியம் சுமார் 110.7 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஏலம் போனது. இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.778 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

World news