மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸின் பார்ட்னர் பால் ஆலன் மரணம். சோகத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம்.

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸின் பார்ட்னர் பால் ஆலன் மரணம். சோகத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம்.



microsoft joint bounder baul allen dead

அமெரிக்காவின் தொழிலதிபரும், பில்கேட்சின் பார்ட்னரும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பால் கார்ட்னர் ஆலன் (65 ) மரணமடைந்துள்ளார். இதனால் மைக்ரோசாப்ட் நிறுவனம் சோகத்தில் மூழ்கி உள்ளது.

பில்கேட்ஸும் இவரும் சேர்ந்து 1975 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்தை துவக்கினர். MS-DOS போலவே Q-DOS என்ற மென்பொருளை கண்டறிந்தார். ஐபிஎம் நிறுவனத்தின் பி.சி ஆபரேட்டிங் சிஸ்டத்தை நிறுவினார்.

Tamil Spark

1953 ஜனவரி 21ல் பால் கார்டனர் ஆலன் சியாட்டில் நகரில் பிறந்தார் . பள்ளி பருவ காலத்திலேயே கணினியை உருவாக்குவதில் ஆர்வமும் திறமையும் கொண்டிருந்தார். 

லேக்சைடு பள்ளியில் படிக்கும் போது தனது 14 வயதில் அவரைப் போன்ற ஆர்வம் நிறைந்த 12 வயது பில்கேட்ஸை சந்தித்தார். அதன் பிறகு இருவரும் கல்லூரியில் சேர்ந்து  படிக்கும் போது மென்பொருள் தயாரிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கினர்.