33,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் பயணி செய்த மோசமான காரியம்! வைரல் வீடியோ.
33,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் பயணி செய்த மோசமான காரியம்! வைரல் வீடியோ.

ரஷ்யாவின் தலைநகர் மாஸ்க்கோவில் இருந்து புக்கெட் என்னும் பகுதிக்கு விமானம் ஓன்று பறந்துகொண்டிருந்தது. சுமார் 33,000 அடி உயரத்திற்கு மேல் அந்த விமானம் பறந்துகொண்டிருக்கையில் விமான பயணி ஒருவர் செம மதுபோதையில் விமானத்தின் கதவை திறக்க முற்பட்டுள்ளார்.
இதுகுறித்து வெளியான தகவலின் படி 30 வயது மதிக்கத்தக்க அந்த நபர் மதுபோதையில் விமான பணி பெண்ணிடம் தவறாக நடக்க முற்பட்டதோடு விமானத்தின் முன் பகுதிக்கு சென்று கலவரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த நிகழ்வுகளை விமானத்தில் பயணம் செய்த தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஒருவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் அந்த நபரின் இந்த திடீர் செயலால் விமானம் உஸ்பெகிஸ்தானில் பாதி வழியில் தரையிறக்கப்பட்டது. பின்னர் அந்த நபரை விமான ஊழியர்கள் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். அதன்பிறகு விமானம் 4 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றுள்ளது.