ஆசையாக பாப்கார்ன் சாப்பிட்டவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! உயிரிழக்கும் நிலைக்கு சென்ற பரிதாபம்! வெளியான பகீர் தகவல்!

ஆசையாக பாப்கார்ன் சாப்பிட்டவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! உயிரிழக்கும் நிலைக்கு சென்ற பரிதாபம்! வெளியான பகீர் தகவல்!


man sruggled heart attack by eating popcorn

பிரிட்டனை சேர்ந்தவர் ஆடம் மார்ட்டின்.  41 வயது நிறைந்த அவர் தீயணைப்பு வீரராக உள்ளார்.இந்நிலையில் ஆடம் மனைவியுடன் கடந்த சில மாதங்களுக்கு முன் வீட்டில் டிவி பார்த்துக்கொண்டே பாப்கார்ன் சாப்பிட்டுள்ளார்.அப்பொழுது பாப்கார்னில் உள்ள சிறிய துண்டு ஒன்று அவரது பல்லின் பின்பக்கத்தில் சிக்கியுள்ளது. மேலும் அது குத்துவது போல் உள்ள நிலையில் அந்தப் பாப்கானை வெளியே எடுக்க அவர் தீவிரமாக முயற்சி செய்துள்ளார்.

 மேலும் அதற்காக கையில் கிடைத்த பேனா மூடி,  கம்பி துண்டு,  ஆணி ஆகியவற்றை வைத்து குத்தி வெளியே எடுக்க முயற்சி செய்துள்ளார். இதில் அவரது  ஈறு கடுமையாக பாதிக்கப்பட்டது. பின்னர் கடுமையான பல்வலியும் ஏற்பட்டுள்ளது. ஆனால் ஆடம்  அதனை பொருட்படுத்தாமல் அசாதாரணமாக விட்டுவிட்டார்.

pop corn

இந்நிலையில் அவருக்கு சமீபத்தில் இரவில் வியர்த்துக் கொட்டுவது,  தலைவலி,  கடுமையான சோர்வு ஆகியவை ஏற்பட்டுள்ளது. மேலும் பயங்கரமான மார்பு வலியும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் மருத்துவமனையில் சென்று பரிசோதனை மேற்கொண்ட போது அவருக்கு இதயத்தை பாதிக்கும் எண்டோகார்டிடிஸ் என்ற தொற்றுநோய் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.

மேலும் ஈறு கடுமையான பாதிக்கப்பட்டதால் உருவான இந்த  தொற்றுநோய் ரத்தத்தில் பாக்டீரியாவை பரப்பும். இதனைத் தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் தற்போது நலமுடன் உள்ளார்.