சிக்கன் சாப்பிட ஆசைப்பட்டு, 32 கிமீ பயணம் செய்த நபருக்கு இப்படியொரு சோதனையா? பாதி வழியில் காத்திருந்த பேரதிர்ச்சி!

சிக்கன் சாப்பிட ஆசைப்பட்டு, 32 கிமீ பயணம் செய்த நபருக்கு இப்படியொரு சோதனையா? பாதி வழியில் காத்திருந்த பேரதிர்ச்சி!


man-paid-benality-for-violate-curfew-to-buying-chicken

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகநாடுகள் முழுவதும் அதிதீவிரமாக பரவி வருகிறது. இத்தகைய கொடிய வைரசால் பல நாடுகளிலும் பாதிப்புகள் மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கை உச்சத்தை தொட்டுள்ளது. உலகத்தை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா முதலிடமும் பிரேசில், இந்தியா போன்ற நாடுகள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளது.

மேலும் ஆஸ்திரேலியாவிலும் கொரோனா வைரஸ் பெருமளவில் பரவி வருகிறது. இந்த நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு,  கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  மேலும் அத்தியாவசிய தேவைகளுக்காக இன்றி, ஊரடங்கை மீறி வெளியே  வருபவர்களுக்கு பெரும் அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

chicken

இந்த நிலையில் மெல்போர்ன் நகரின் மேற்கு பகுதியான வெர்ரிபீ என்ற பகுதியில் வசிக்கும் நபர் ஒருவருக்கு திடீரென பட்டர் சிக்கன் சாப்பிட வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது. அதனால் அவர்தான்  அடிக்கடி சாப்பிடும், தனக்கு மிகவும் பிடித்தமான உணவுவிடுதிக்கு செல்வதற்காக 32 கிமீ தூரம் பயணம் மேற்கொண்டுள்ளார். ஆனால் அவரை பாதிவழியில் தடுத்து நிறுத்திய போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அப்பொழுது அந்த நபர் கூறிய காரணத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், ஊரடங்கு விதிகளை மீறி அவர் வெளியே வந்ததற்காக இந்திய மதிப்பில் ரூ.86, 582 அபராதம் விதித்துள்ளனர். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.