அமேசிங்... நீருக்குள் நீண்ட நேர முத்தம்... 13 ஆண்டு கால கின்னஸ் உலக சாதனையை முறியடித்த ஜோடி!!

அமேசிங்... நீருக்குள் நீண்ட நேர முத்தம்... 13 ஆண்டு கால கின்னஸ் உலக சாதனையை முறியடித்த ஜோடி!!


longest-underwater-kissguinness-record-breaking-couple

தென் ஆப்ரிக்காவை சேர்ந்த இளம் ஜோடியினர் தண்ணீருக்குள் நீண்ட நேரம் முத்தம் செய்து 13 ஆண்டு கால கின்னஸ் உலக சாதனையை முறியடித்து சாதனை படைத்துள்ளது.

தென்ஆப்பிரிக்காவை சேர்ந்தவர் மைல்ஸ் கிளவ்டையர் - பெத் நீல் தம்பதியினர். நீச்சல் வீராங்கனையான இவர்கள் இருவரும் 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவரை ஒருவர் சந்தித்த நிலையில் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு நிவே என்ற மகள் உள்ளார்.

காதலர் தினத்தில் ஏதேனும் வித்தியாசமாக செய்ய வேண்டும் என்ற நினைத்த இந்த தம்பதியினர் அதற்காக கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டுள்ளனர். அதன்படி லக்ஸ் சவுத் ஆரி அடால் என்ற தங்கும் விடுதியில் உள்ள நீச்சல் குளத்திள் இறங்கிய இந்த தம்பதியினர் நீரில் முத்தம் கொடுத்தப் படி சுமார் 4 நிமிடம் 6 வினாடிகள் வரை இருந்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளனர்.

இதற்கு முன்பு நீருக்குள் சுமார் 3 நிமிடம் 24 வினாடிகள் மட்டுமே நிகழ்த்திய நிலையில் இந்த ஜோடி அந்த சாதனையை முறியடித்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.