20 அடி நீளமுடைய பைத்தான் பாம்பு! மூன்று உயிருள்ள ஆடுகளை விழுங்கும் கொடூரமான காட்சி! இறுதியில் பாம்பு ஆக்ரோஷமாக சீறி... திக் திக் வீடியோ காட்சி..



giant-python-swallows-goats-viral-video

 சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி கொண்டிருக்கும் ஒரு அதிர்ச்சி தரும் வீடியோ, பலரது மனதைக் குலைக்கும் வகையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் 20 அடி நீளமுடைய மலைப்பாம்பு மூன்று உயிருள்ள ஆடுகளை ஒரே நேரத்தில் விழுங்கும் கொடூரமான காட்சி பதிவாகியுள்ளது.

இந்த விபரீத சம்பவம் எங்கு நடந்தது என்பது உறுதியாக தெரியவில்லை. இருப்பினும், உத்தரப்பிரதேசம் மாநிலம் பால்ராம்பூர் மாவட்டம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. வீடியோவில், பாம்பு பசியால் ஆடுகளை விழுங்கி, பின்னர் சிக்கிக்கொள்பதும், வெளியே வர போராடும் காட்சியும் தெளிவாக காணப்படுகிறது.

பெரும் அளவிலான உணவுகளை உட்கொண்டதால், பாம்பு நகர முடியாமல் தானாகவே கூண்டில் சிக்கியுள்ளது. இந்தக் காட்சி பலருக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: Video : ராட்சத மலைப்பாம்பை குழந்தை போல் தோள்களில் தூக்கி சாலையில் நடந்து சென்ற நபர்! மிரள வைக்கும் வைரல் காணொளி....

இந்த வீடியோ எப்போது எங்கே எடுக்கப்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், இது மலைப்பாம்புகள் வாழும் பகுதிகளில் பசு, ஆடு போன்ற மாடுகளை பாதுகாக்கும் அவசியத்தை வலியுறுத்துகிறது.

வனத்துறையினர், இத்தகைய அபாயகரமான நிலைகளை கையாளுவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தொழில்நுட்ப வசதிகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.

இதையும் படிங்க: Video: அம்மாடியோவ்.. ஒரு வீட்டிலிருந்து மரத்திற்கு மரம் ஏறிச் செல்லும் மலைப்பாம்பு! பார்ப்போரை மெய்சிலிர்க்க வைக்கும் காணொளி...