Solar Eclipse: 7 நிமிடங்கள் 31 வினாடிகள்.. இருளில் தவிக்கப்போகும் பூமி..!
2027ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏற்படும் சூரிய கிரகணம், நடப்பு நூற்றாண்டின் நீண்ட சூரிய கிரகணம் என கணிக்கப்பட்டுள்ளது.
நீண்ட கிரகணம்:
Rare Solar Eclipse in 2027: 21ம் நூற்றாண்டின் மிக நீண்ட முழு சூரிய கிரகணம் 2027 ஆகஸ்ட் 2ம் தேதி ஏற்படுகிறது என வானியலாளர்கள் உறுதி செய்துள்ளனர். இந்த கிரகணத்தின் போது சந்திரன், சூரியனை முழுமையாக மறைப்பதால் உலகின் சில பகுதிகளில் பகல் நேரத்திலேயே சுமார் 7 நிமிடம் 31 விநாடிகள் இருள் சூழும். பூமி-சந்திரன்-சூரியன் ஒரே நேர்கோட்டில் வரும்போது, சந்திரனின் நிழல் பூமியின் மீது விழுவதால் முழு சூரிய கிரகணம் நிகழ்கிறது. இது நடப்பு நூற்றாண்டில் நிகழும் பெரிய சூரியகிரகணம் ஆகும்.
வெப்பம் திடீரென குறையும்:
வானியல் ஆய்வாளர்கள் கணக்கீடுகளின்படி, 2027 ஆகஸ்ட் கிரகணம் சில துணைக் கிரகணங்களின் தாக்கத்தால் முழு கிரகண காலம் சுமார் 6 நிமிடம் 23 விநாடிகள் வரை குறையக்கூடும் என்றாலும், அது இன்னும் இந்த நூற்றாண்டின் நீளமான முழு சூரிய கிரகணமாகவே இருக்கும். கிரகணத்தின் போது வானம் திடீரென மாறி, வெப்பநிலை சில டிகிரிகள் வரை குறைய வாய்ப்புள்ளதாகவும் வானியலாளர்கள் கூறுகின்றனர்.

நல்ல வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க:
இந்த முழு சூரிய கிரகணத்தை உலகின் பல பகுதிகளில் இருந்தும் காண முடியும். சூரிய கிரகணங்களுக்கான பாதை, நேரம் உள்ளிட்ட முன்னறிவிப்புகள் பல ஆண்டுகளுக்கு முன்பே துல்லியமாக வெளியிடப்படுவதால், பொதுமக்களும் விஞ்ஞான ஆர்வலர்களும் இதனை காண முடியும். முழு சூரிய கிரகணத்தை நேரடியாக வெறும் கண்களால் பார்க்காமல், பாதுகாப்பு கண்ணாடிகள் பயன்படுத்துவது சிறந்தது.