கோடிகளை சம்பாதித்த பெண்ணுக்கு... இன்னைக்கு ஆஸ்திரேலியாவில் வீடு துடைக்கும் வேலை! இந்திய பெண் கூறிய அதிர்ச்சி தகவல்.... உண்மை பின்னணி வீடியோ..!!!
லண்டனில் முன்னணி நிறுவனத்தில் உயர்பதவியில் பணியாற்றி, ஆண்டு ஒன்றுக்கு சுமார் ரூ.1 கோடி சம்பளம் பெற்றுவந்த மும்பையைச் சேர்ந்த ஸ்வேதா தேசாய், தற்போது ஆஸ்திரேலியாவில் வீடுகளைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார். வாழ்க்கையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் குறித்து அவர் பகிர்ந்த அனுபவம் சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.
கணவரின் வேலை காரணமாக 2023-ல் மெல்போர்ன் நகருக்கு குடிபெயர்ந்த ஸ்வேதாவுக்கு, லண்டனில் இருந்தது போன்ற உயர்நிலை வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், பல மாதங்கள் முயன்றும் எதிர்பார்த்த வாய்ப்பு அமையவில்லை.
லண்டனில் உயர்பதவி... மெல்போர்னில் புதிய போராட்டம்
முன்னதாக பிரபல நிறுவனத்தில் பணியாற்றிய ஸ்வேதா, ஆண்டுக்கு சுமார் 100,000 பவுண்டுகள் சம்பாதித்து வந்ததாக தெரிவித்துள்ளார். வசதியான வாழ்க்கை, பிராண்டட் பொருட்கள் என வாழ்ந்த நிலையில், வெளிநாட்டு மாற்றம் அவரின் தொழில் வாழ்க்கையையே தலைகீழாக மாற்றியதாக கூறப்படுகிறது.
வேலை தேடலில் தொடர்ந்து ஏமாற்றம் ஏற்பட்டதால், ஒரு கட்டத்தில் மன அழுத்தத்தையும் சந்தித்ததாக அவர் பகிர்ந்துள்ளார். இதையடுத்து, தனது மனக்குழப்பத்தை தள்ளிவைத்து Airbnb வீடுகளை சுத்தம் செய்யும் பணியில் சேர்ந்தார்.
“வேலை எதுவாக இருந்தாலும் அது அடையாளம்”
தற்போது Airbnb cleaning வேலை செய்து வரும் ஸ்வேதா, அந்த அனுபவம் தன்னுடைய எண்ணங்களை மாற்றியதாக கூறியுள்ளார். “பணம் என்பது வெறும் காகிதம் அல்ல; அது ஒரு பெண்ணின் சுதந்திரம். வேலை எதுவாக இருந்தாலும் அது நமக்கான அடையாளத்தை தருகிறது” என்று தெரிவித்துள்ளார்.
ஒருகாலத்தில் கோடிகளில் சம்பாதித்த கைகளே இன்று வீடுகளை சுத்தம் செய்கின்றன என்ற எண்ணம் ஆரம்பத்தில் வருத்தமளித்ததாகவும், ஆனால் அதுவே வாழ்க்கையை புதிய கோணத்தில் பார்க்க வைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
பல வேலைகளில் பிஸியான ஸ்வேதா
வீடுகளைச் சுத்தம் செய்வதோடு மட்டுமல்லாமல், குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்பித்தலும் செய்து வருகிறார். அதன்பின், சொந்தமாக ஒரு தொழில் தொடங்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்.
தொடர்ச்சியான முயற்சி மற்றும் தன்னம்பிக்கையால் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பிக் கொண்டிருக்கும் ஸ்வேதா தேசாய் பற்றிய இந்தக் கதை, இணையத்தில் பலரையும் சிந்திக்க வைத்துள்ளது.
இதையும் படிங்க: வாராஹி அம்மன் தரிசனம்! வாழ்வில் மறக்க முடியாது.... ஆன்மீக ரகசியத்தை உடைத்த ஸ்ருதி ஹாசன்! என் வாழ்க்கையில் நடந்த திருப்புமுனை அதுதான்...!!!