"லண்டனை உலுக்கிய கொலை வழக்கு..." காரில் மறைக்கப்பட்ட உடல்.!! குற்றவாளிகளுக்கு20 வருட சிறை.!!



london-court-sentences-killers-of-justin-henry-to-20-ye

ஜஸ்டின் ஹென்றி வழக்கென்பது தெற்கு லண்டனில் ஒரு காரில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் 34 வயது நபரின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட கொலை வழக்காகும். இவ்வழக்கு தொடர்பான முக்கிய விவரங்கள் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

ஜஸ்டின் ஹென்றி அக்டோபர் 15, 2023 அன்று இரவு வீடு திரும்பாததால் அக்டோபர் 16 ,2023 அன்று அவரை காணவில்லை என புகாரளிக்கப்பட்டது. விசாரணையில்  ஹென்றியின் உடல் நவம்பர் 10 ,2023 அன்று தெற்கு லண்டனில் உள்ள பர்லியில் நிறுத்தப்பட்டிருந்த சிவப்பு நிற நிசான் அல்மெரா காரில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கொலையில் சந்தேகத்தின் அடிப்படையில் லூயிஸ் பெஞ்சமின் மற்றும் ஜமான் அலி ரிச்சர்ட் என்ற 2 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

world

விசாரணையின் முடிவில் பெஞ்சமின் அப்பார்ட்மெண்டில் சுவர்களின் ரத்த தெளிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் அருகிலுள்ள கருப்பு நிற பிளாஸ்டிக் பையில் ரத்த தரை விரிப்பு இருந்தது. இது தொடர்பாக நடத்தப்பட்ட பரிசோதனையில் கொலை செய்யப்பட்ட ஹென்றியின் ரத்தம் என உறுதிப்படுத்தப்பட்டது.

இதையும் படிங்க: கள்ள தொடர்பு.. கணவன், குழந்தை கொலை.!! பெண்ணுக்கு இரட்டை ஆயுள் தண்டனை.!! காதலன் ரிலீஸ்.!!

8 வார விசாரணைகளுக்குப் பிறகு, படுகொலை மற்றும் நீதிக்கு இடையூறு செய்த குற்றத்திற்காக அந்த 2 நபர்களுக்கும் தண்டனை விதிக்கப்பட்டது. பெஞ்சமினுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரிச்சர்ட்க்கு 8 ஆண்டுகள் மற்றும் 6 மாத சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

இதையும் படிங்க: நெல்லையில் பயங்கரம்... காதல் விவகாரத்தில் இளைஞர் கொலை.!! 3 சிறுவர்கள் கைது.!!