உலகம்

நடுவானில் நொருங்கிய விமானத்தின் உதிரி பாகங்கள்; புகைப்படத் தொகுப்பு!

Summary:

Lion plane crash photographs

இந்தோனோசிய தலைநகர் ஜகார்தாவில் இருந்து உள்ளூர் நேரப்படி இன்று காலை 6.33 மணிக்கு புறப்பட்டுச்சென்ற பயணிகள் விமானம், 13-வது நிமிடத்தில் விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. 

இந்தோனேசிய தலைநகர் ஜகார்தாவில் இருந்து பங்க்கால் பினாங் தீவுக்கு புறப்பட்ட லயன் ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான அந்த விமானத்தை தேடும் பணியில்  இந்தோனேசிய அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த நிலையில், கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்த விமானம் கடலில் விழுந்து நொறுங்கியுள்ளது.

நடுவானில் நொருங்கிய விமானத்தின் உதிரி பாகங்கள்; புகைப்படத் தொகுப்பு!

இதனால், விமானத்தில் பயணம் செய்த அனைவரும் பலியாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டபோது கிடைத்த உதிரி பாகங்களின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. ஆனால் பயனிகளின் நிலை பற்றி உறுதியான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.


Advertisement