லிப்ட்டில் இந்த தவறை மட்டும் செய்யாதீங்க.... நண்பர்களுடன் விளையாடும் போது நடந்த விபரீதம்! 12 வயது சிறுவன் பரிதாப பலி! அதிர்ச்சி வீடியோ!!!
மும்பை குர்லா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த 12 வயது சிறுவன், Lift Shaft-இல் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டின்போது நேர்ந்த சோகம்
நேரு நகர் பகுதியில் உள்ள 'ஷமிம் டவர்' குடியிருப்பின் 10-வது மாடியில் வசித்து வந்த முகமது ஜைன் ஜமீர் தாசில்தார் என்ற சிறுவன், நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்த லிப்டின் வெளிப்புற கதவின் மீது சாய்ந்தபோது திடீரென சமநிலையை இழந்ததால், கதவு திறந்து லிப்ட் துவாரத்திற்குள் கீழே விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் பலனில்லை
இதனால் பலத்த காயமடைந்த சிறுவனை அக்கம்பக்கத்தினர் உடனடியாக மீட்டு சியோன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனை சென்றடையும் முன்பே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சிசிடிவி ஆதாரமாக போலீஸ் விசாரணை
இந்த CCTV காட்சிகள் முழுவதும் பதிவாகியுள்ளதால், அவற்றை முக்கிய ஆதாரமாக வைத்து நேரு நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். குறிப்பாக லிப்ட் பராமரிப்பில் அலட்சியம் இருந்ததா, பாதுகாப்பு நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டனவா என்பது குறித்தும் அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
Mumbai – An 11-year-old boy tragically lost his life after falling into a lift shaft in Nehru Nagar, Kurla.The incident occurred at the Shamim Tower building when the boy was playing hide-and-seek with other children on the 10th floor. According to preliminary information, the… pic.twitter.com/DkUI3MA0Jb
— NextMinute News (@nextminutenews7) July 8, 2026