#BigBreaking: தைவான் நாட்டை தொடர்ந்து, ஜப்பானில் இன்று அதிபயங்கர நிலநடுக்கம்; மக்கள் வீதிகளில் தஞ்சம்.!

#BigBreaking: தைவான் நாட்டை தொடர்ந்து, ஜப்பானில் இன்று அதிபயங்கர நிலநடுக்கம்; மக்கள் வீதிகளில் தஞ்சம்.!



japan-earthquake-on-4-april-2024


தைவான் நாட்டில் நேற்று ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவுகோல் நிலநடுக்கம், சுனாமி அலைகளை ஏற்படுத்தியது. நிலநடுக்கத்தால் மக்கள் பதற்றமடைந்த வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். 

கட்டிட இடிபாடுகளில் சிக்கி 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர், 1000 க்கும் அதிகமானோர் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 25 ஆண்டுகளில் இல்லாத அளவு பெரிய நிலநடுக்கத்தை தைவான் தற்போது எதிர்கொண்டுள்ளது.

இந்நிலையில், ஜப்பான் நாட்டில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து, நேற்று தைவானில் நிலநடுக்கம் உணரப்பட்டு இருந்தது. தற்போது மீண்டும் ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலநடுக்கமானது ஜப்பானின் கிழக்கு கடற்கரை பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 6.1 அழகில் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீதியில் தஞ்சம் அடைந்துள்ளனர். சுனாமி எச்சரிக்கை ஏதும் தற்போது வரை விடுக்கப்படவில்லை எனினும், மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.