அடேங்கப்பா... லேசர் வைத்து ஏவுகணையை அழிக்கும் சோதனை வெற்றி - இஸ்ரேல் மாஸ் சம்பவம்.!



israel-laser-defense-system-iron-beam

எதிரிகளின் ஏவுகணையை குறிவைத்து தாக்கி அழிக்கும் லேசர் கருவி சோதனை வெற்றி அடைந்தது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

உலக நாடுகள் அனைத்தும் தங்களின் நாட்டு பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு ஆயுத தயாரிப்பு முயற்சியில் இறங்கியுள்ளது. இவற்றில் பல தயாரிப்புகள் வெளி உலகுக்கு தெரியாமலும் நடைபெற்று வருகின்றன. 

இந்த நிலையில், இஸ்ரேல் ஏற்கனவே லேசர் ஆயுதத்தை தயார் செய்து சோதனை நடத்தியிருந்த நிலையில், தற்போது ஏவுகணை அமைப்பு மற்றும் ஆளில்லா விமானத்தை தாக்கும் பாதுகாப்பு சோதனை நடைபெற்றது. 

இந்த சோதனையில் சிறிய ரக ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானம் பயன்படுத்தப்பட்ட நிலையில், இஸ்ரேலின் லேசர் பாதுகாப்பு அமைப்பு வானை கண்காணித்து ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத்தை தாக்கி சேதப்படுத்தி அழித்தது. 

இந்த விஷயம் தொடர்பான வீடீயோவை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள இஸ்ரேலின் பிரதமர் நப்டாலி பென்னட், லேசர் ஏவுகணை பாதுகாப்பு கருவியின் வெற்றியை உறுதி செய்துள்ளார்.