உலகம்

7 லட்சத்தை சூதாட்டத்தில் வென்ற நபருக்கு நேர்ந்த கதி.!! அப்படி என்ன நடந்தது தெரியுமா..?

Summary:

7 லட்சத்தை சூதாட்டத்தில் வென்ற நபருக்கு நேர்ந்த கதி.!! அப்படி என்ன நடந்தது தெரியுமா..?

இந்தியா வம்சாவளியைச் சேர்ந்தவர் ஸ்ரீரங்கா(வயது 54). இவர் தற்பொழுது அமெரிக்கா நாட்டில் நியூஜெர்சியின் பிளைன்ஸ்போரா பகுதியில் தங்கி, அங்குள்ள பிரபல மருந்து நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கடந்த செவ்வாய்கிழமை அன்று சூதாட்டத்தில் 10,000 டாலர் வென்றுள்ளார். இந்த டாலர் இந்தியா மதிப்பின் படி 7 லட்சத்தை தாண்டுகிறது. 

இந்நிலையில் இவர் சூதாட்டத்தில் வென்ற பணத்தை கொண்டு காரில் வீட்டிற்க்கு புறப்பட்டுள்ளார். இவர் சூதாட்டத்தில் வென்ற பணத்தைப் பார்த்த ஜெகாய் ரீட் ஜான் என்ற கொள்ளையன், ஸ்ரீரங்காவை பின்தொடர்ந்து சென்றுள்ளார். பின்னர், ஸ்ரீரங்கா  வீட்டிற்க்கு வந்து சேர்ந்த நிலையில், உறங்கியுள்ளார். இவரை பின் தொடர்ந்து வந்த கொள்ளையன் ஸ்ரீரங்கா வைத்திருந்த பணத்தை கொள்ளையடிக்க முயன்றுள்ள போது ஸ்ரீரங்கா, அந்த கொள்ளையனை தடுத்துள்ளார். அப்போது அந்த கொள்ளையன் அவரை துப்பாக்கியால் கொன்றுவிட்டு தப்பி ஓடிவிட்டான். 

பின்னர், இந்த கொலை சம்பவம் குறித்து போலிசார் விசாரணை செய்ததில், ஜெகாய் ரீட் ஜான் அவரைப் பின்தொடா்ந்து வந்ததாகவும், ஸ்ரீரங்காவை சுட்டுக்கொன்று பணத்தை கொள்ளயடித்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து போலிசார் ஜெகாய் ரீட் ஜானை கைது செய்துள்ளனா்.


Advertisement