72 வயதில்,. 35 ஆண்டுகளாக பாலியல் தொல்லை.. 48 பெண் நோயாளிகள் பாதிப்பு.. இந்திய மருத்துவரால் ஸ்காட்லாந்தில் பதற்றம்.!indian-doctor-abused-a-girl-patient-in-scotland

35 ஆண்டுகளாக தன்னிடம் பரிசோதனைக்கு வந்த 48 பெண் நோயாளிகளுக்கு பாலியல் தொல்லையளித்த, இந்திய மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்திய வம்சாவழியில் பிறந்து ஸ்காட்லாந்தில் குடிபெயர்ந்த மருத்துவர் கிருஷ்ணா சிங் (வயது78). இவர் கடந்த 35 ஆண்டுகளாக தன்னிடம் பரிசோதனைக்கு வந்த 48 பெண் நோயாளிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்திருக்கிறார். அத்துடன் தன்னிடம் பரிசோதனைக்கு வரும் பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொள்வது, தொடுவது, முத்தம் கொடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்த விஷயம் தொடர்பாக ஒருவர் காவல்துறையில் புகார் அளித்த நிலையில், கிருஷ்ணா சிங் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், அவரிடம் விசாரணை நடத்திய நிலையில், தன்னுடைய குற்றங்களை ஒப்புக்கொள்ளாத கிருஷ்ணா சிங் 'இந்தியாவில் தான் கற்ற சிகிச்சை முறைகளை மட்டுமே நான் பின்பற்றி வருகிறேன் எனவும், அதை இவர்கள் தவறாக புரிந்து கொண்டார்கள்' என்றும் தெரிவித்துள்ளார்.scotlandமேலும், ஸ்காட்லாந்தின் தகவல்படி, 1983 முதல் 2018 வரை காலகட்டத்தில் புகார் அளிக்கப்பட்ட சம்பவங்களின் அடிப்படையிலேயே கிருஷ்ணா சிங் கைது செய்யப்பட்டுள்ளார். பிரிட்டிஷ் மருத்துவ சங்கத்தில் மிகவும் மரியாதைக்குரிய நபராக பார்க்கப்படும் இவர், தனது பலஆண்டு கால மருத்துவ அனுபவத்தால் மருத்துவத்துறையில் சிறந்து விளங்கியுள்ளார்.

இவர் மீது கடந்த 2011 ஆம் ஆண்டு புகார் அளிக்கப்பட்டதையடுத்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது. விசாரணையில், கிருஷ்ணா சிங் தன் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை மறுத்துள்ளார். மேலும், காவல்துறையினர் ஆதாரங்களை திரட்டி அவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை நிரூபிக்க முடியாததால் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஸ்காட்லாந்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.