பாகிஸ்தானில் அவசர ஆலோசனை கூட்டம்; இந்தியாவிற்கு பதிலடி கொடுக்க முடிவு.!

பாகிஸ்தானில் அவசர ஆலோசனை கூட்டம்; இந்தியாவிற்கு பதிலடி கொடுக்க முடிவு.!


india-vs-pakistan---pulvama-attack-effect

சரியான நேரத்தில் தகுந்த இடத்தில் இந்தியாவுக்கு பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புல்வாமாவில் கடந்த 14ம் தேதி சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வாகனம் மீது கோழைத்தனமாக தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில், 40க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர். 

India

இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்நிலையில் இதற்கு இந்தியா பதிலடி கொடுக்க வேண்டும் இன்று உலக நாடுகள் சில ஆதரவு அளிப்பதாக தெரிவித்தது. 

இந்நிலையில் இன்று அதிகாலை யாரும் எதிர்பாராதா விதமாக, இந்திய விமானப்படை வீரர்கள், இந்தியா- பாகிஸ்தான் எல்லை ஓரம், மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த தீவிரவாதிகள் முகாம் மீது சுமார் 1000 கிலோ எடைகொண்ட குண்டுகளை வீசி பதறவைக்கும் பதிலடி கொடுத்துள்ளது. 

India

இந்த பயங்கர தாக்குதலில், சுமார் 300க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் இந்தியா- பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது. காஷ்மீர், பஞ்சாப் உள்ளிட்ட எல்லைப்பகுதிகளில் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசனை குழுவிடம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அவசர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் முடிவில் சரியான நேரத்தில் தகுந்த இடத்தில் இந்தியாவிற்கு பதிலடி கொடுக்கப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.