BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
திருச்சி: "போலீசை கூப்டு.. என்னடா பண்ணுவ?" - நடுரோட்டில் முதியவரின் நெஞ்சில் மிதித்து தாக்குதல்..!
நடுரோட்டில் முதியவரின் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி, தண்டாங்கோரை பகுதியில், நூற்றாண்டு பழமையான பிள்ளையார் கோவில் உள்ளது. இந்த பிள்ளையார் கோவிலை அப்பகுதியில் வசித்து வரும் முதியவர் தெய்வராஜன் என்பவர் பராமரித்து குடமுழுக்கு நடத்தலாம் என கூறி உள்ளூர் மக்களிடம் ஆதரவு திரட்டி இருக்கிறார்.
இதனிடையே, கோவில் பகுதிகளை சிலர் ஆக்கிரமித்து, குடமுழுக்கு விசயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஸ்ரீரங்கம் பகுதியில் இருக்கும் மகளின் வீட்டிற்கு சென்ற முதியவர், பின் மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, அவரை அரிவாள் உட்பட பயங்கர ஆயுதத்துடன் 2 பேர் மர்ம கும்பல் வழிமறித்து இருக்கிறது.
இதையும் படிங்க: மின்விசிறியில் தூக்கில் கிடந்த சிறுவன்; பெற்றோர் கண்ணீர்.. திருச்சியில் சோகம்.!
-qav5l.jpg)
சரமாரி தாக்குதல்
முதியவரை சாலையில் தாக்கி, அரிவாளால் மிரட்டி, படுக்கையில் கிடத்தி நெஞ்சில் கால்களை வைத்து, தலைமுடியை பிடித்து இழுத்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. முதியவரை தாக்கும் நபர்கள், "எங்களை யாராலும் கேள்வி கேட்க முடியாது. நாங்கள் யார் தெரியுமா? போலீசுக்கு போன் போடு. என்னடா பண்ணுவ? *** பொது இடத்திலேயே சொல்கிறேன், *** எங்களை ஒன்றும் செய்ய இயலாது. உட்காருடா ***, நாங்கள்தான் இங்க. போட்டு போயிருவோம். நாங்கள் யார் என நினைத்த.. ^^^(( சாவுடா *** எவனாலும் எங்களை ஒன்றும் செய்ய இயலாது. என்ன?" என பேசினர்.
இதன் பதைபதைப்பு காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், முதியவரின் மீது தாக்குதல் நடத்திய நபர்கள் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. கையில் அரிவாளுடன் தாக்குதல் நடத்திய கும்பலால், பொதுமக்களும் செய்வதறியாது சிலநிமிடங்கள் திகைத்துப்போயினர்.
” ஏய் நாங்க யாரு தெரியுமா❓
— ᴛɪʀɪꜱʜᴀɴᴋᴀʀᴀᴘᴀᴅɪᴀɴ 𝑀𝑜𝒹𝒾 𝒻𝒶𝓂𝒾𝓁𝓎 (@Tirishankar) January 8, 2025
என்ன பண்ணுவ சாவு நீ❓
லால்குடியில் பட்டப்பகலில் கோவில் விவகாரத்தில் முதியவர் ஒருவரை சாலையில் இழுத்து போட்டு அரிவாளைக் காட்டி மிரட்டும் இரண்டு பேர் முகத்தில் உதைத்தும், நெஞ்சில் மிதித்தும் அட்டகாசம்.#Trichy | #TempleIssue | #OldMan | #Attack |… pic.twitter.com/1JVdktfbHv
இதையும் படிங்க: வருண்குமார் Vs நாதக பிரச்சனை உண்டாகியது எப்படி? முழு விளக்கம்.. பரபரப்பு தகவல்.!