வீட்டுப்பாடம் செய்யாத மகன்; கண்டித்ததால் தந்தை போதைப்பொருள் வைத்திருப்பதாக போலீசுக்கு தகவல்.!!



  in China a 10 Year Old Boy complaint Against Father 

சீன நாட்டில் உள்ள நிங்சியாவின், யின்சுவான் நகரில் 10 வயது சிறுவன் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள பள்ளியில் பயின்று வந்த நிலையில், சம்பவத்தன்று தனது தந்தை வீட்டுப்பாடம் செய்யாத மகனை திட்டி இருக்கிறார். 

தந்தையை சிக்க வைத்தார்

இதனால் தந்தையை எதிலாவது சிக்க வைக்க வேண்டும் என விபரீத எண்ணத்துடன் இருந்த சிறுவன், பக்கத்தில் இருக்கும் கடைக்கு சென்று, காவல்துறையினருக்கு தொடர்பு கொண்டு, தந்தை வீட்டில் போதைப்பொருள் வைத்திருப்பதாக கூறி இருக்கிறார். 

இதையும் படிங்க: 9 வயதில் இனி திருமணம் செய்யலாம்; ஈராக்கில் அமலான சட்டம்.. அதிர்ச்சியில் மக்கள்.!

போதைப்பொருள் பறிமுதல்

இதனைக்கேட்ட காவல்துறையினர் விரைந்து வந்து சோதனை நடத்தியதில், போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டது. தகவல் கொடுத்த சிறுவன் குறித்த விசாரணையில், அவர் தந்தையை பழிவாங்க இவ்வாறான செயலை மேற்கொண்டது தெரியவந்தது. போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் சிறுவனின் தந்தையும் கைது செய்யப்பட்டார்..

இதையும் படிங்க: #Breaking: குவைத்தில் 2 தமிழர்கள் உட்பட 3 பேர் மரணம்; குளிருக்கு தீ மூட்டி, கரும்புகையால் சோகம்.!