5 ஆண்டுகள் கோமாவில் இருந்த கணவர்! கண் விழித்ததும் மனைவியிடம் கூறிய அந்த ஒற்றை வார்த்தை!
5 ஆண்டுகள் கோமாவில் இருந்த கணவர்! கண் விழித்ததும் மனைவியிடம் கூறிய அந்த ஒற்றை வார்த்தை!

சீனாவை சேர்ந்த லீ என்பவர் கடந்த 2013 ஆம் ஆண்டு சாலை விபத்தில் சிக்கி உள்ளார். இந்த விபத்தில் லீயின் தலையில் பயங்கரமாக அடிபட்டதில் அவரது மூளை பாதிக்கப்பட்டு கோமா நிலைக்கு சென்று உள்ளார்.
மிக மோசமான நிலையில் மருத்துவமனையில் அவரை அனுமதித்த அவரது உறவினர்கள் மருத்துவர்கள் கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். லி கோமா நிலைக்கு சென்று விட்டதாகவும் அவர் மீண்டும் சுய நினைவை பெறுவது சாத்தியமற்றது என்றும், ஒருவேளை வீட்டில் வைத்து அக்கறையுடன் கவனித்து வந்தால் அவர் குணமடைய சில வாய்ப்புகள் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு திரும்பிய அவரை அவரது உறவினர்கள் மற்றும் அவரது மனைவி மிகவும் பொறுமையுடனும், அக்கறையுடனும் கண்காணித்து வந்துள்ளனர்.
இதில் லீயின் மனைவி நாளொன்றுக்கு 20 மணி நேரம் தனது கணவரின் அருகில் இருந்தே அவரை கவனித்து வந்துள்ளார் தினமும் 2 அல்லது 3 மணி நேரம் மட்டுமே தூங்கி ஓய்வு எடுத்த அவர் மீதி நேரங்களில் தனது கணவரை பார்ப்பதிலேயே கடந்த ஐந்து வருடங்களாக தனது காலத்தை கடத்தி உள்ளார்.
இந்நிலையில் ஐந்து வருடங்கள் கழித்து லி க்கு மீண்டும் சுய நினைவு திரும்பியுள்ளது. சுயநினைவு திரும்பிய உடன் அருகில் இருந்த தனது மனைவியை பார்த்து உன்னை நான் மனதார காதலிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
இந்த நெகிழ்ச்சியான சம்பவம் பற்றி லீ யின் மனைவி கூறுகையில், இந்த ஐந்து ஆண்டுகளில் ஒருமுறைகூட அவரை விட்டு நான் விலகியது இல்லை என்றும் அவருக்குப் பிடித்தமான பாடல்களை இசைக்க விட்டபடி அவர் பேசவில்லை என்றாலும் நான் அவருடன் பேசிக் கொண்டேதான் இருந்தேன் என கூறியுள்ளார்.
இந்த ஐந்து ஆண்டுகளில் லீயின் மனைவி சுமார் 10 கிலோ அளவுக்கு உடல் எடை குறைந்துள்ளார். லி சுயநினைவு பெற்றாலும் அவருக்கு மீண்டும் ஒரு சில மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதால் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.