வெறும் 40 வினாடிகளில் கொரோனா வைரஸை கொல்லும் அறை..! சோதனை முயற்சியில் இறங்கியுள்ள நாடு.! எங்கு தெரியுமா.?



hong-kong-airport-trials-a-disinfection-booth-that-remo

உடலின் மேற்பரப்பில் இருக்கும் கொரோனா வைரஸை வெறும் 40 நொடிகளில் கொல்லும் அரியவகை அறை ஒன்றை ஹாங்காங் அரசு அந்நாட்டின் விமான நிலையத்தில் அமைத்துள்ளது.

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பேரழிவுகளை ஏற்படுத்திவருகிறது. கொரோனா வைரஸில் இருந்து மக்களை காப்பாற்ற அனைத்து நாடுகளும் தீவிர முயற்ச்சியில் இறங்கியுள்ளது. அதேநேரம் கொரோனவை கொல்லும் மருந்து கண்டுபிடிக்கும் பணிகளும் ஒருபுறம் வேகமாக நடந்துவருகிறது.

corono

இந்நிலையில், ஹாங்காங் நாட்டில் உள்ள விமான நிலையம் ஒன்றில் சோதனை முயற்சியாக மனிதனின் வெளிப்புற உடலில் தங்கியிருக்கும் கொரோனா வைரஸை வெறும் 40 வினாடிகளில் கொல்லும் வகையில் நவீன அறை ஓன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த அறையில் இருக்கும் நானோ ஊசிகள் மற்றும், உள்ளே பூசப்பட்டிருக்கும் கிருமி நாசினிகளை அறையின் உள்ளே இருப்பவரின் மீது செலுத்தி 40 வினாடிகளில் கொரோனவை கொல்லும் முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.