திடீரென பரவும் ஹாண்டா வைரஸ்.. மீண்டும் ஊரடங்கா? பிரபல டாக்டர் பளீச் பதில்.!



Hantavirus Spread Sparks Panic: Doctor Clarifies Lockdown Fears and Virus Reality

அர்ஜென்டினாவில் இருந்து பரவியதாக கூறப்படும் ஹாண்டா வைரஸ் குறித்து மருத்துவர் பிரகாஷ் பதில் அளித்துள்ளார்.

தொடரும் கேள்விகள்:

கொரோனா வைரஸை போலவே, தற்போது Hanta எனப்படும் புதிய வைரஸ் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த விஷயம் குறித்து மருத்துவர் பிரகாஷ் மூர்த்தி தனது சமூக வலைப்பக்கத்தில் விபரமாக தகவலை பகிர்ந்து இருக்கிறார். இந்த வைரஸ் அதிகம் பரவுமா? கொரோனா போல ஊரடங்கு அமலாகுமா? தடுப்பூசி போட வேண்டுமா? என்ற பல கேள்விகளுக்கு தனது குறிப்பில் பதிலும் அளித்துள்ளார்.

இதையும் படிங்க: 'மழைநீரில் வெறும் காலில் நடக்காதீங்க'.. வைரஸ் அபாயம்.. தமிழக சுகாதாரத்துறை கடும் எச்சரிக்கை.!

வைரஸ் உறுதி:

அதாவது, ஹாண்டா வைரஸ் புதியது இல்லை. கடந்த 1996, 2018ம் ஆண்டுகளில் ஹாண்டா வைரஸ் அர்ஜென்டினாவில் பரவியது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வைரஸ் மீண்டும் தற்போது அர்ஜென்டினாவில் இருந்து கப்பலில் பயணம் செய்த நபர்களிடம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

World news இதுவரை பரவிய வைரஸ்:

இந்த வைரஸை பரவாமல் தடுக்க, கப்பலில் இருக்கும் மக்களிடம் சோதனை நடத்தி, பாதிக்கப்பட்டோரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தால் போதுமானது. இதுபோன்ற வைரஸை பார்த்து மக்கள் அச்சப்பட தேவையில்லை. 2022ல் எம்பாக்ஸ், 2025ல் ரத்தக்கண்ணீரை வரவழைக்கும் மார்பர்க் வைரஸ், கேரளாவில் நிப்பா வைரஸ் பரவல், மூளையை தின்னும் அமீபா பாதிப்பு, பன்றிக்காய்ச்சல் என பரவியது. 

World news
அச்சம் வேண்டாம்:

சமீபத்தில் காகம் சென்னையில் அதிகம் இறந்து போனதற்கு காரணம் வைரஸ் என்பது தெரியவந்தது. இதற்காக தற்போது பரவும் ஹாண்டா வைரஸ் குறித்து அச்சப்பட தேவையில்லை. கோவிட் போல மீண்டும் ஒருநிலை வராது. உடல்நலம் குறித்த சந்தேகம் இருந்தால் மருத்துவரை நாடுவது நல்லது.

ஹாண்டா வைரஸ்:

எலிகளின் சிறுநீர், மலம், எச்சில் வாயிலாக பரவும் ஹாண்டா வைரஸ் அமெரிக்கா, அர்ஜென்டினா நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பிற நாடுகளுக்கு அதிகம் பரவியது இல்லை. இதன் அறிகுறியாக காய்ச்சல், தலைவலி, சோர்வு, மூச்சுத்திணறல் இருக்கும். சுவாசக்கோளாறு, சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தும். உரிய சிகிச்சை பெற்றால் ஆபத்து இல்லை.

இதையும் படிங்க: கஞ்சா விற்பதை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்.. கர்ப்பிணி என்றும் பாராமல் கொடூர செயல்.! பதறவைக்கும் காட்சிகள்.!