"வயதானாலும் விட்டு வைப்பதில்லை. அதுக்கு முடிவே இல்லையா.?" வேதனையில் மூத்த பாலிவுட் நடிகை.!
நடுத்தெருவில் குழந்தைகள் விளையாடும் போது நடந்த பயங்கரம்! அலறி அடித்து சிதறி ஓடும் குழந்தைகள்... கொலை நடுங்க வைக்கும் வீடியோ..!!
உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் பட்டப்பகலில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குடியிருப்புப் பகுதியில் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்த நேரத்தில் நடந்த இந்த கொடூரச் சம்பவம் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து தீவிர கேள்விகளை எழுப்பியுள்ளது.
குழந்தைகள் முன் நடந்த கொடூரம்
கிரேட்டர் நொய்டாவின் ஒரு குறுகிய சந்தில் சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தபோது, திடீரென அங்கு வந்த மர்ம கும்பல் ஒருவர் மீது குறிவைத்து சரமாரியாக துப்பாக்கியால் சூடு நடத்தியது. பல துப்பாக்கி குண்டுகள் பாய்ந்ததில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சூட்டின்போது அருகில் இருந்த குழந்தைகள் அலறியடித்துக் கொண்டு சிதறி ஓடும் காட்சிகள் அங்கிருந்த CCTV கேமராவில் பதிவாகியுள்ளன. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்விரோதம் காரணமா?
இந்தக் கொலை முன்விரோதம் காரணமாக நடந்திருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணையில் போலீசார் சந்தேகிக்கின்றனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பியதுடன், குற்றவாளிகளை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் இப்படியான துணிகர தாக்குதல் நடந்தது பொதுமக்களிடையே பாதுகாப்பு குறித்த அச்சத்தை அதிகரித்துள்ளது. குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்துள்ள நிலையில், இந்த சம்பவம் மீண்டும் ஒருமுறை நகரங்களில் பாதுகாப்பு அமைப்புகள் வலுப்படுத்தப்பட வேண்டிய அவசியத்தை நினைவூட்டுகிறது.
ग्रेटर नोएडा के ईकोटेक इलाके से गोलीबारी की खौफनाक घटना सामने आई है। सामने आए सीसीटीवी वीडियो में छोटे-छोटे बच्चे गली में खेलते दिखाई देते हैं कि तभी एकाएक फायरिंग होने लगती है और चारों तरफ हड़कंप मच जाता है। बदमाश फायरिंग को अंजाम देकर मौके से फरार हो जाते हैं। pic.twitter.com/luUeF3HJH0
— Ratan Gupta (@ratanguptabid) February 24, 2026