உலகம்

நடுவானில் போதை தலைக்கேறிய பெண் கழிவறைக்குள் நுழைந்து செய்த களேபரம்! பயத்தில் நடுநடுங்கிப் போன பயணிகள்!

Summary:

girl smoke in flying flight

அமெரிக்காவை சேர்ந்தவர் டானா காசி முஸ்தபா. இவர் ஜெர்மனியிலிருந்து வர்ஜீனியாவில் உள்ள டல்லஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு செல்வதற்காக யுனைட்டட் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்றில் பயணம் செய்துள்ளார். அப்பொழுது விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென அவசர ஒலி எழுந்துள்ளது. உடனே பணிப்பெண்கள் விமானம் முழுவதும் ஆய்வு செய்துள்ளனர். 

பின்னர் கழிவறையில் பார்த்தபோது முஸ்தபா புகைபிடித்து கொண்டிருந்துள்ளார் இதனை கண்ட பணிப்பெண்கள் அவரை வெளியில் இழுத்துள்ளனர். ஆனால் அவர் அனைவரையும் தள்ளி விட்டு மீண்டும் கழிவறைக்குச் செல்ல முயற்சி செய்துள்ளார். இந்நிலையில் விமானத்தில் பயணம் செய்த விமானப்படை தளபதிகள் இருவர் முஸ்தபாவை அமர வைத்து அவரது கையில் கட்டுவதற்கு முயற்சி செய்துள்ளனர். ஆனால் அளவுக்கு மீறிய போதையில் இருந்த அவர் இருவரையும் தள்ளிவிட்டு ஏறி மிதித்துள்ளார். 

    

மேலும் விமானத்தில் உள்ள அனைவரையும் கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்வேன் மிரட்டி கூச்சலிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து விமானம் வர்ஜினியா விமான நிலையம் சென்றதும்  போலீசார்கள் அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர். இந்நிலையில் பயணிகள் அனைவரையும் அச்சுறுத்திய காரணத்திற்காகவும், விமானத்தில் அத்துமீறி நடந்ததற்காகவும் முஸ்தபாவிற்கு அதிகபட்சமாக 7 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 


Advertisement