உலகம் மருத்துவம் லைப் ஸ்டைல்

தொடர்ந்து 2 மாதமாக தூங்கும் அதிசய பெண்! என்ன காரணம் தெரியுமா? பதறவைக்கும் தகவல்.

Summary:

Girl sleeping two moths continuously

கொலம்பியா நாட்டை சேர்ந்த 17 வயது இளம் பெண் ஒருவர் கிளெயின் லெவின் என்ற வினோத நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நோய் உலகத்திலையே மொத்தம் 40 பேருக்குத்தான் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. மிகவும் அறியவகை நோய்யாக இந்த நோய் பார்க்கப்படுகிறது.

இந்த நோயினால் பாதிக்கப்படுபவர்கள் தங்களுக்கே தெரியாமல் தூங்கிவிடுவார்கள். தூங்க ஆரம்பித்தாள் இரண்டு மூன்று மாதங்கள் வரை தொடர்ந்து தூங்குவார்களாம். ஒருவேளை இடையில் எழுந்து ஏதேனும் வேலை பார்க்க ஆரம்பித்தாள் மிகவும் சோர்வாகி உடனே தூங்க ஆரம்பித்துவிடுவார்களாம்.

மேலும், தூக்கத்திலையே இருக்கும் இவர்களுக்கு பசி, தாகம் எதுவும் ஏற்படாதாம். ஆனால், சரியான நேரத்திற்கு சாப்பிடாவிட்டால் உயிரே போய்விடுமாம். அதனால், இவர்கள் தூங்கிக்கொண்டிருக்கும் போதே உணவு திரவ வடிவில் வழங்கப்படுமாம்.


Advertisement