விமான நிலையத்தில் பெண்ணின் கைப்பையை சோதித்த அதிகாரிகளுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! உள்ளே என்ன இருந்தது தெரியுமா?
அமெரிக்காவில் உள்ள ஓஹியோ மாகாணத்தைச் சேர்ந்தவர் ஜெனிபர் டால்போட். 43 வயதான இவர் கடந்தவாரம் பிலிப்பைன்சின் மணிலாவில் இருக்கும் அகினோ சர்வதேச விமானநிலையத்தில் இருந்து, அமெரிக்க செல்ல இருந்துள்ளார்.
இந்நிலையில் விமான நிலையில் பாதுகாப்பு அதிகாரிகள் வழக்கமான சோதனையில் இருந்தபோது அவர்களிடம் சிக்காமல் ஜெனிபர் தனியாக சென்றுள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரை தனியே அழைத்து சோதனை செய்துள்னனர்.

போலீசாரின் சோதனையில் ஜெனிபர் வைத்திருந்த ஒரு சிறிய கைப்பையை சோதனை செய்த அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அந்த பையில் பிறந்து ஆறு நாட்களே ஆன ஆண் குழந்தை ஒன்றை ஜெனிபர் மறைத்து வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
ஜெனிபரிடம் அந்த குழந்தைக்கான ஆவணங்கள் ஏதும் இல்லாததால் அது அவரது குழந்தையா அல்லது குழந்தையை கடத்தி சொல்கிறாரா என போலீசார் விசாரித்துவருகின்றனர்.