தற்பெருமை அடித்த இளம்பெண்.! அலேக்காக அள்ளி சிறையில் அடைத்த போலீசார்!! வெளியான பகீர் பின்னணி!!

தற்பெருமை அடித்த இளம்பெண்.! அலேக்காக அள்ளி சிறையில் அடைத்த போலீசார்!! வெளியான பகீர் பின்னணி!!



girl got jail punishment for stole bank information

அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் வசித்து வந்தவர் பெய்ஜ் தாம்சன். 33 வயது நிறைந்த சாஃப்ட்வேர் என்ஜினீயரான இவர் தனது கணினி திறமையை பயன்படுத்தி, கேபிடல் ஒன் என்ற வங்கியின் 10 கோடி வாடிக்கையாளர்களின் கிரெடிட் கார்டு தொடர்பான முழு விவரங்களையும்  திருடியுள்ளார்.

 மேலும் இதனை மிகவும் பெருமையாக சமூகவலைத்தளத்திலும், கிட் கியூப்  என்ற இணையதளத்திலும் தற்பெருமை அடித்து வெளியிட்டுள்ளார். இதனை கண்ட நெட்டிசன் ஒருவர், உடனே கிரெடிட் கார்டு தகவல் திருட்டு கேபிடல் ஒன் வங்கிக்கு தகவல் அளித்துள்ளார். அதனை தொடர்ந்து அந்த வங்கியும் கிரெடிட் கார்டு தொடர்பான விவரங்கள் திருடப்பட்டதை கண்டறிந்து  பெய்ஜ் தாம்சன் மீது போலீசில் புகார் அளித்துள்ளது.

police

இதனை தொடர்ந்து தகவல் திருட்டில் ஈடுபட்ட அவரை போலீசார் கைது செய்தனர். மேலும்  அவர் திருடி வைத்திருந்த விவரங்களையும் அவரிடமிருந்து மீட்டுள்ளனர். 

மேலும் பெய்ஜ் தாம்சன் தான் திருடிய கிரெடிட் கார்டு விவரங்களை பயன்படுத்தி எந்தவொரு  நிதிமோசடியில் ஈடுபடவில்லை. ஆனாலும் தகவல்களை திருடியததற்காக அவருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும், 2 லட்சத்து 50 ஆயிரம் அபராதமும் விதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.