உலகம்

பிறந்தநாள் கொண்டாட சென்ற மருத்துவ மாணவிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! கதறி துடிதுடித்த பெற்றோர்கள்!

Summary:

Girl dead in white valcano bursting in newzland

நியூசிலாந்தின் புகழ்பெற்ற சுற்றுலா தலம்  ஒயிட் தீவு. இங்கு வாரம் திடீரென பயங்கர எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. இதில் பல நாட்டையும்  சேர்ந்த  சுற்றுலா பயணிகள் 47 பேர் சிக்கிக்கொண்டனர். மேலும் உடனடியாக மீட்பு பணிகள் தீவிரமாக்கபட்ட நிலையிலும் எரிமலை வெடிப்பில் சிக்கி 9 பேர் பலியானர். 

மேலும் 8 பேர் மாயமான நிலையில் 30 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அதனை தொடர்ந்து சமீபத்தில்  6 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். இந்நிலையில்  சிகிச்சை பெற் வந்த ஒருவரும் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது.


மேலும் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரை சேர்ந்தவர் கிரிஸ்டல் ஈவ் புரோவிட் 21 வயது நிறைந்த அவர் கால்நடை மருத்துவம் படித்து வந்தார். இந்நிலையில் அவர் தனது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக   தனது பெற்றோர் மற்றும் சகோதரியுடன் ஒயிட் தீவிற்கு சுற்றுலா சென்றுள்ளார்

இந்நிலையில் அங்கு ஏற்பட்ட எரிமலை வெடிப்பில் சிக்கி கிரிஸ்டல் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது தாய்க்கு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. கிரிஸ்டல் தந்தை மற்றும் சகோதரிக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பிறந்தநாள் கொண்டாட சென்ற இடத்தில்  கிரிஸ்டலின் உயிரிழந்தது அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


 


Advertisement