தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
அண்ணன் கழுத்தை கோடரியால் வெட்டிக்கொன்ற 14 வயது தங்கை: செல்போன் தரமறுத்ததால் ஆத்திரம்.!
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கைராகர்ஹ் சுய்காதன் கண்டை மாவட்டம், அமேலிடிகாலா கிராமத்தில் 14 வயதுடைய சிறுமி தனது 18 வயது சகோதரர் மற்றும் பெற்றோருடன் வசித்து வருகிறார்.
சிறுவர்களுக்கு பெற்றோர் அவர்களின் பயன்பாட்டுக்கு என ஒரு செல்போன் வாங்கி கொடுத்த காரணத்தால், உடன்பிறந்த இருவரும் அவ்வப்போது செல்போனுக்காக சண்டையிட்டு வந்துள்ளனர்.
பெற்றோர் இல்லாத நேரம் நடந்த பயங்கரம்:
இந்நிலையில், சிறுமி தனது அண்ணனிடம் நண்பர்களிடம் பேச செல்போன் கேட்டு இருக்கிறார். அவர் கொடுக்க இயலாது என கூறியுள்ளார். பெற்றோர் வீட்டில் இல்லாத நேரம் அண்ணன்-தங்கை அடித்துக்கொண்டுள்ளனர்.
ஒருகட்டத்தில் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற சிறுமி, வீட்டில் உறங்கிக்கொண்டு இருந்த அண்ணனின் கழுத்தில் கோடரியால் வெட்டிக்கொலை செய்துள்ளார். இந்த சம்பவத்தில் நிகழ்விடத்திலேயே 18 வயது நபர் உயிரிழந்தார்.
கொலையை மறைக்க முயற்சித்த தங்கை:
சிறுமி எந்த விதமான சலனமும் இன்றி தனது துணிகளை சுத்தம் செய்து குளித்துள்ளார். பின் சகோதரர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டதாக அக்கம் பகத்திடம் கூற, காவல் துறையினர் வந்துள்ளனர்.
அதிகாரிகளை முதலில் விசாரணை நடத்திவிட்டு, பின் சிறுமியை சந்தேகத்தின் பேரில் விசாரித்தபோது உண்மை தெரியவந்தது. இதனையடுத்து, சிறுமியை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.