தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
கோடைகாலத்தில் உடலில் ஏற்படும் வியர்வை நாற்றத்தில் இருந்து தப்பிக்க இதை செய்து பாருங்க.!?
வெயிலின் தாக்கம்
பொதுவாக ஒவ்வொரு வருடமும் மார்ச், ஏப்ரல், மே போன்ற மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். குறிப்பாக மே மாதத்தில் அக்னி நட்சத்திரம் ஆரம்பித்து விடுவதால் மே மாதம் 4ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும். இந்த வெயிலில் வியர்வை அதிகமாக வெளியேறி உடலை துர்நாற்றம் வீச செய்கிறது.
வெயிலின் தாக்கத்தினால் ஏற்படும் நோய்கள்
வெயிலின் தாக்கத்தினால் வியர்வை வெளியேறுவது, நீர் இழப்பு, உடல் துர்நாற்றம், அரிப்பு, தேமல், அம்மை, வயிற்று பிரச்சனை, சிறுநீரகத்தில் எரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றது. குறிப்பாக கோடை காலத்தில் குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் போன்றவர்கள் அதிகமாக நோய் பாதிக்கப்பட்டு வெயிலின் தாக்கத்திற்கு உள்ளாகின்றனர். இதில் குறிப்பாக பலருக்கும் உடலில் ஏற்படும் வியர்வை நாற்றம் மிகப்பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. இந்த வெயிலின் தாக்கத்திலிருந்து எப்படி தப்பிக்கலாம் என்பதை குறித்து இப்பதிவில் விளக்கமாக பார்க்கலாம்?
வியர்வை நாற்றத்தில் இருந்து நம் உடலை பாதுகாக்கும் வழிமுறைகள்
1. கோடை காலத்தில் எண்ணெயில் வறுத்த உணவுகள், அதிக எண்ணெய் பலகாரங்கள், காரமான உணவுகள் போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்
2. நீர் சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலில் வியர்வை நாற்றம் ஏற்படுவதை தடுக்கலாம்.
3. உடற்பயிற்சி செய்பவர்களாக இருந்தால் அதிகாலையில் அல்லது வெயில் அதிகமாகுவதற்கு முன்பாகவே செய்து முடித்து விட வேண்டும்.
4. அதிக வெயில் காலங்களில் ஒரு நாளைக்கு இரண்டு முறை குளிப்பது நல்லது.
5. காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிவதன் மூலம் வியர்வை உடலிலேயே தேங்காது.
6. அக்குள் மற்றும் தொடை இடுக்கு பகுதிகளில் டியோ ட்ரெண்ட், கிரீம்கள், லோஷன்கள் உபயோகப்படுத்தலாம். இது போன்ற ஒரு சில செயல்முறைகளின் மூலம் உடலில் அதிகப்படியான வியர்வை நாற்றம் ஏற்படுவதை தடுக்கலாம்.