அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
கேம் சேஞ்சர் படத்தின் ட்ரைலர் வெளியீடு; ஆக்சன்-அரசியலில் கலக்கும் ராம்சரண்.! எஸ்ஜே சூர்யா மாஸ் சம்பவம்.!
ராம் சரணின் கேம் சேஞ்சர் திரைப்படத்தின் ட்ரைலர் காட்சிகள் வெளியாகியுள்ளது.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், நடிகர்கள் ராம் சரண், கியாரா அத்வானி, அஞ்சலி, சமுத்திரக்கனி, எஸ்ஜே சூர்யா, ஸ்ரீகாந்த் உட்பட பலர் நடிக்க உருவாகியுள்ள திரைப்படம் கேம் சேஞ்சர் (Game Changer). ராம் சரண் தெலுங்கு & தமிழில் நடிக்கும் இத்திரைப்படம், ஷங்கர் இயக்கத்தில் உருவாகி இருப்பதால் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கிறது. தமன் இசையில் படம் உருவாகியுள்ளது. 10 ஜனவரி 2024 அன்று படம் உலகளவில் வெளியாகிறது.
எஸ் ஜே சூர்யா கவனத்தை பெறலாம்
இந்நிலையில், கேம் சேஞ்சர் படத்தின் டிரைலர் காட்சிகள் வெளியாகியுள்ளன. அரசியல், ஆக்சன் என அதிரடியாக உருவாகி இருக்கும் கேம் சேஞ்சர் திரைப்படத்தில், நடிகர் எஸ்ஜெ சூர்யா வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் நடித்து வெளியான மாநாடு, மார்க் ஆண்டனி ஆகிய படங்கள் நல்ல வெற்றியை அடைந்தது. அதேபோல, கேம் சேஞ்சரிலும் அவரின் நடிப்பு பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: #Breaking: எஸ்வி சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை - சென்னை உயர்நீதிமன்றம் உறுதி.!
ஆந்திர அரசியல் படம்
ரூ.350 கோடி செலவில் எடுக்கப்பட்டுள்ள திரைப்படம், ஆந்திர அரசியலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் ஒய்.எஸ் ஜெகன் மோகனின் ஆட்சியை பாஜக, தெலுங்கு தேசம், பவன் கல்யாண் ஆகிய கட்சிகள் இணைந்து அகற்றி, இன்று நடிகர் பவன் கல்யாண் அம்மாநிலத்தில் துணை முதல்வராக இருக்கிறார். பவன் கல்யாணின் குடும்பமும், ராம் சரண் குடும்பமும் நெருங்கிய சொந்தங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தெலுங்கு மொழியில் கேம் சேஞ்சர் ட்ரைலர்
கேம் சேஞ்சர் படத்தின் ட்ரைலர் வெளியீடு நிகழ்ச்சி
இதையும் படிங்க: தனுஷின் இட்லி கடை பட பர்ஸ்ட்லுக் வெளியீடு; லிங்க் உள்ளே.!