தெரிந்த நபர், தெரியாத நபர் என 487 ஆண்களுடன் கட்டாய உறவு! காதலன் செய்த உச்சக்கட்ட கொடூரம்.... 4 பிள்ளைகளின் தாய் நீதிமன்றத்தில் சொன்ன பகீர் வாக்குமூலம்..!!!



france-woman-abuse-case-court-verdict

பிரான்சில் நான்கு குழந்தைகளின் தாயான 42 வயது பெண் ஒருவர், தனது முன்னாள் காதலனால் பல ஆண்டுகள் பாலியல் மற்றும் மனரீதியான சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் குற்றவாளிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

லேடிசியா ஆர் என்ற அந்த பெண், வங்கி மேலாளராக இருந்த முன்னாள் காதலன் கியோம் புக்கி கடந்த 2015 முதல் 2022 வரை தன்னை கொடூரமாக கட்டுப்படுத்தி வந்ததாக தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் சாதாரண உறவாகத் தொடங்கிய விஷயங்கள் பின்னர் வன்முறை மற்றும் மிரட்டலாக மாறியதாகவும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: ஆட்டோவில் இறந்ததாக நினைத்து ஆசிரியருடன் 4 மணி நேரம் உடலுறவு கொண்ட ஆட்டோ ஓட்டுநர்! காமக் கொடூரனின் செயலால் இறுதியில் காத்திருந்த பயங்கர டுவிஸ்ட்..!!!

அந்தரங்க வீடியோவால் மிரட்டல்

தகவலின்படி, உறவில் இருந்து வெளியேற முயன்றபோது, தனிப்பட்ட வீடியோக்களை வெளியிடுவதாக புக்கி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் நீண்ட காலம் மௌனமாகவே துன்பத்தைச் சகித்ததாக லேடிசியா நீதிமன்றத்தில் கண்ணீருடன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும், நண்பர்கள், சக ஊழியர்கள் மற்றும் தெரியாத நபர்களுடன் கூட கட்டாயமாக உறவு கொள்ள வைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சில நேரங்களில் நெடுஞ்சாலை பெட்ரோல் நிலையங்கள் போன்ற பொது இடங்களிலும் அந்நியர்களுடன் இருக்க வற்புறுத்தப்பட்டதாக கூறியுள்ளார்.

487 பேருடன் கட்டாய உறவு

லேடிசியாவின் வாக்குமூலப்படி, சுமார் 487 ஆண்களுடன் கட்டாயப்படுத்தி உறவு கொள்ள வைக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. இந்த நீண்டகால பாலியல் சித்ரவதை காரணமாக தற்போது கடுமையான உடல்நல பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அரசு தரப்பு, குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வலியுறுத்தியது. ஆனால், விசாரணை முடிவில் கியோம் புக்கிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

பரோலுக்கு கடும் நிபந்தனை

தண்டனைக் காலத்தின் மூன்றில் இரண்டு பங்கு முடிந்த பிறகே பரோல் வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், குற்றவாளி தரப்பு இது இருவரின் சம்மதத்துடன் நடந்த ‘விளையாட்டு’ என்று வாதிட்டது.

பிரான்சில் கடந்த சில மாதங்களுக்கு முன் பரபரப்பை ஏற்படுத்திய ஜிசெல் பெலிக்கோட் வழக்கின் தீர்ப்பே, தன்னுடைய அனுபவங்களை வெளிப்படையாக பகிர தைரியம் தந்ததாக லேடிசியா கூறியிருப்பது கவனம் பெற்றுள்ளது.

 

இதையும் படிங்க: மனைவி இல்லாத நேரத்தில் பல் மருத்துவர் இளம்பெண்ணிடம் செய்த சில்மிஷம்! டாக்டர் விரித்த வலையில் சிக்கிய அந்த சில நிமிடத்தில்.... மொத்தமாக மாறிய வாழ்க்கை!!!