
Flight toilet
இன்று உலகம் முழுதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகின்றது. இந்த நிலையில் விமானத்தின் கழிவறையில் இளம்பெண் ஒருவர் கொரோனா சேலஞ்ச் என்ற பெயரில் ஒரு வீடியோவை வெளியிட்டு அனைவரையும் முகச்சுளிக்க வைத்துள்ளார்.
சீனாவில் உஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனோ வைரஸ் தற்போது உலகம் முழுவதும் தாக்குதலை ஏற்ப்படுத்தி வருகிறது. இதுவரை இந்த வைரஸ் தாக்குதலினால் 8000 பேர் பலியாகி இருக்கின்றனர். சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.
இந்நிலையில் மியான்மரை சேர்ந்த லூயிஸ் என்ற 22 வயது பெண் கொரோனா சேலஞ்ச் என்ற பெயரில் விமானத்தின் கழிவறைக்குள் புகுந்து நாக்கால் நக்குவதை காணொளியாக எடுத்து வெளியிட்டு இருக்கின்றார்.தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது.
இதனை பார்த்த நெட்டிசன்கள் அந்த இளம்பெண்ணை கடுமையாக திட்டி வருகின்றனர். மேலும் அந்த இளம்பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் தெரிவித்து வருகின்றனர்.
Advertisement
Advertisement