ஓடுபாதையில் நிலைதடுமாறி ஆடிய விமானம்! பின் நடந்ததை பார்த்தீங்களா! வைரலாகும் ஷாக் வீடியோ!!

ஓடுபாதையில் நிலைதடுமாறி ஆடிய விமானம்! பின் நடந்ததை பார்த்தீங்களா! வைரலாகும் ஷாக் வீடியோ!!


flight-lands-sideways-and-flies-suddenly

வட ஐரோப்பாவில் வீசி வரும் கடுமையான புயலால் அதிகமான காற்று வீசி வருகிறது. இந்த சூழலில் 
பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ஒன்று ஹீத்ரோ விமான நிலையத்தில் தரையிறக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்பொழுது விமானம் ஓடுபாதையில் சென்று விமான டயர்களின் ஒரு பகுதி மட்டும் ரன்வேயை தொட்டுள்ளது. 

ஆனால் தற்போது அதிக காற்றின் காரணமாக விமானம்  நிலைதடுமாறி  ஆடியவாறு சென்றுள்ளது. இந்த நிலையில் தரை இறக்குவதால் ஏற்படும் ஆபத்தை உணர்ந்த விமானி சாதுர்யமாக செயல்பட்டு தாமதிக்காமல் விமானத்தை மேற்கொண்டு இயக்கி பறக்கத் துவங்கினர். இதனால் பயணிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பின்னர் இரண்டாவது முயற்சியில் விமானம் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. புயல் காரணமாக விமானம் ஓடுபாதையில் நிலைதடுமாறி சென்று பின்னர் மேலே பறந்து சென்ற ஷாக் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.