புயலில் சிக்கி தரையிறங்க முடியாமல் அந்தரத்தில் தத்தளித்த பயணிகள் விமானம்..! திகிலூட்டும் வீடியோ காட்சி..!



Flight crosswind landing at London Heathrow during Storm

பிரித்தானியாவில் கடந்த சில நாட்களாக டென்னிஸ் புயல் வீசிவரும் நிலையில் புயலில் சிக்கி, தரையிறங்க முடியாமல் தத்தளிக்கும் விமானம் ஒன்றின் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

டென்னிஸ் புயல் காரணமாக பிரித்தானியாவில் தொடர்ந்து கனமழை பெய்வதோடு புயல் காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக 230 கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாட்டின் ஒருசில பகுதிகளில் ஒரு மாதம் பெய்யவேண்டிய மழை இரண்டே நாட்களில் பெய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், முன்பு இல்லாத அளவிற்கு சுற்றுசூழல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுற்றுசூழல் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமையன்று லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்தில் தரையிறங்க முயன்ற எட்டிஹாட் விமானம் படி ஓடுபாதைக்கு மேல் புயல் கற்றில் தத்தளித்த திகிலூட்டும் காட்சி தற்போது வைரலாகிவருகிறது.

விமானியின் சாமர்த்தியத்தால் அந்த விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.