விமானம் தரையிறங்கியபோது விபத்து.! பிரபல இசையமைப்பாளர் - மனைவி, குழந்தை உள்பட 9 பேர் பலி.!

லத்தின் அமெரிக்க நாடுகளில் ஒன்றான டொமினிக்கன் குடியரசு நாட்டில் விமானம் ஓடுபாதையிலேயே விழுந்து விபத்திற்குள்ளானதில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
புளோரிடாவில் இருந்து டொமினிக்கன் குடியரசு நாட்டின் லா இஸபெல்லா நகருக்கு சென்று கொண்டிருந்த விமானம் ஒன்று சான் டொமிங்கோவில் உள்ள லாஸ் அமெரிக்காஸ் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. பின்னர் இந்த விமானம் 15 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் அங்கிருந்து புறப்பட்ட போது விமானத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதனால், விமானத்தை மீண்டும் இசபெல்லா விமான நிலையத்திலேயே அவசரமாக விமானி தரையிறக்கியுள்ளார். அப்போது விமானம் கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையிலேயே விழுந்தது. இதில், விமானம் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இந்த கோர விபத்தில் உலக புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஜோஷி ஏஞ்சல் ஹர்னடின்ஸ் தனது மனைவி, குழந்தை மற்றும் நண்பர்கள் என மொத்தம் 9 பேர் பலியாகினர். இந்த சம்பவம் ஜோஷி ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.