என்னால் சித்திரவதை தாங்க முடியல! நீங்களே காயத்தை பாருங்க! அவங்க பணம் அதிகாரத்தை வச்சு! போலீஸ்காரரின் மனைவி தற்கொலை! இன்ஸ்டாகிராமில் மன வேதனையுடன் கண்ணீர் விட்ட வீடியோ காட்சி...



lucknow-police-wife-suicide-video

லக்னோவில் இளம்பெண் சவும்யா தற்கொலை செய்து கொண்ட சம்பவம், சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம், உறவினர் மற்றும் அதிகாரிகளின் தவறான மன ஒடுக்குமுறையை வெளிக்கொண்டு வந்துள்ளது.

தற்கொலைக்கு முன் வீடியோ பதிவு

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவிலுள்ள பக்ஷிதா காதலாப் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றும் அனுராக் சிங்கின் மனைவியான சவும்யா காஷ்யப், நேற்று தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

இன்ஸ்டாகிராம் வீடியோவில் அதிர்ச்சியான குற்றச்சாட்டு

சவும்யா தற்கொலை செய்யும் முன்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் தூக்குக் கயிறின் அருகே நின்று கதறி அழுதபடி, “எனது கணவர் அனுராக் சிங் மற்றொரு பெண்ணை திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்கு அவரது தாயும் வற்புறுத்துகிறார்கள்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: Video : ஓடும் பைக்கில் கணவனை செருப்பால் அடித்த மனைவி! என்னா அடி அடிக்குறாங்க பாருங்க! வைரலாகும் காணொளி...

பணியும் அதிகாரமும் - மன அழுத்தம் அதிகரிப்பு

அதோடு, “எனது மைத்துனர் சஞ்சய் காவல்துறையில் பணியாற்றுகிறார். மற்றொரு உறவினர் ரஞ்சித் ஒரு வக்கீலாக இருக்கிறார். அவர்கள் மூவரும் தங்களது அதிகாரத்தையும் பணத்தையும் பயன்படுத்தி என்னை தொடர்ந்து மன அழுத்தத்திற்கு உள்ளாக்கி சித்ரவதை செய்துள்ளனர்” எனவும் கூறியுள்ளார்.

வீடியோவை மையமாக கொண்டு விசாரணை

சவும்யாவின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனால், பொதுமக்கள் வருத்தத்திலும், அதேசமயம் கோபத்திலும் உள்ளனர். போலீசார் இந்த வீடியோவை முக்கிய ஆதாரமாகக் கொண்டு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். அனுராக் சிங் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது தற்கொலைக்குத் தூண்டுதல், மனவேதனை அளித்தல் உள்ளிட்ட கோணங்களில் வழக்குப்பதிவு செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சவும்யாவின் திடீர் முடிவும், அவர் வெளியிட்டுள்ள உணர்வுபூர்வமான வீடியோவும் இந்த சம்பவத்தை மேலும் பரபரப்பாக மாற்றியுள்ளது. இதற்கான நீதிமுறைகள் விரைவில் நடைபெற வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

 

இதையும் படிங்க: தலைக்கேறிய போதை! சொகுசு காரில் தறிகெட்டு 100 கிமீ வேகத்தில் வந்த நபர்! ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியான 3 பேர்! பகீர் வீடியோ காட்சி..