அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
அம்பானி மனைவி நீதா அம்பானி அணிந்த உலகின் விலையுயர்ந்த புடவை! பெறுமதி எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாம பாருங்க...
இந்தியாவின் பிரமாண்டமான தொழிலதிபர் குடும்பங்களில் ஒன்றான அம்பானி குடும்பம், செலவுகளிலும் நவீன வாழ்க்கைமுறையிலும் எப்போதும் முன்னிலையில் இருப்பது போல், தற்போது நீதா அம்பானியின் ஆடையால் மீண்டும் பிரபலமாகியுள்ளது.
நீதா அம்பானியின் புடவை சமூக ஊடகங்களில் வைரல்
நீதா அம்பானி அணிந்த உலகில் மிக விலையுயர்ந்த புடவை தொடர்பான செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 2015ஆம் ஆண்டு, ரிலையன்ஸ் குழுமத்தின் முக்கிய நிர்வாகி பரிமல் நத்வானியின் மகனின் திருமண விழாவில், அவர் இந்த விசேஷமான புடவையை அணிந்து வந்தார்.
சிறப்பு வடிவமைப்புடன் பாரம்பரியமும் கலந்து
இந்த புடவை சென்னை சில்க்ஸ் நிறுவனம் சார்பாக இயக்குநர் சிவலிங்கம் உருவாக்கியவை என பாலிவுட்ஷாடிஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பனாரசி பட்டு மற்றும் நேர்த்தியான எம்பிராய்டரி வேலைப்பாடுகளுடன், இந்த புடவை ஆன்மீக கலை உணர்வையும் உள்ளடக்கியது.
இதையும் படிங்க: நடிகை நயன்தாரா பயன்படுத்தும் Red handbag விலை எவ்வளவு தெரியுமா? வெளியான பெறுமதி... ஷாக்கில் ரசிகர்கள்...
விலை மற்றும் சிறப்பம்சங்கள்
இது முழுவதும் கையால் தயாரிக்கப்பட்டதுடன், புடவையின் அலங்காரத்திற்காக விலை உயர்ந்த ரத்தினங்கள், தங்க நூல் மற்றும் பாரம்பரிய உந்தி வேலைப்பாடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதனால் இந்த புடவையின் மொத்த பெறுமதி சுமார் 40 லட்சம் ரூபாய் என மதிக்கப்படுகிறது.
பிரமாண்ட வாழ்க்கை முறைதான் சிறப்பு
அம்பானி குடும்பம் எப்போதும் தங்களது ஆடைகளில் கிளாசிக் பாரம்பரியத்தையும், நவீன ஸ்டைலையும் இணைத்துத் தெரிவு செய்கின்றது. நீதா அம்பானியின் இந்த புடவை அவரது ஸ்டைல் உணர்வையும், இந்திய கலாச்சாரத்தின் அழகையும் ஒரே நேரத்தில் பிரதிபலிக்கின்றது.
இதையும் படிங்க: நடிகை நயன்தாரா பயன்படுத்தும் Red handbag விலை எவ்வளவு தெரியுமா? வெளியான பெறுமதி... ஷாக்கில் ரசிகர்கள்...

