இந்தோனேசியா விமான விபத்து.! பயணம் செய்த அனைவரும் பலி.! கடும் துக்கத்தில் பிரதமர் மோடி.!

இந்தோனேசியா விமான விபத்து.! பயணம் செய்த அனைவரும் பலி.! கடும் துக்கத்தில் பிரதமர் மோடி.!


flight accident in indonesia

இந்தோனேசியாவின் ஜகார்த்தா விமான நிலையத்திலிருந்து போண்டியானாக் பகுதிக்கு புறப்பட்ட ஸ்ரீவிஜய விமான நிறுவனத்துக்கு சொந்தமான  போயிங் 737-500 விமானம், 53 பயணிகள் மற்றும் 12 விமானப் பணியாளர்களுடன் சனிக்கிழமை புறப்பட்டது. 

அந்த விமானம் புறப்பட்டு சில நிமிடத்தில் ரேடாரில் இருந்து மாயமானது. இதையடுத்து விமானத்தைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இந்தநிலையில் அந்த விமானத்தின் உடைந்த பாகங்கள் கடலில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விமானத்தில் பயணம் செய்த அனைவரும் இறந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், இந்த விபத்தில் இறந்தவர்களுக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது ட்விட்டர் பதிவில், "இந்தோனேசியாவில் நடந்த துரதிஷ்டவசமான விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துக்கமான சூழ்நிலையில் இந்தோனேசியாவுடன் இந்தியா துணை நிற்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.