உலகம் லைப் ஸ்டைல்

உதடுகள், பற்கள்..! அப்படியே மனித முகச்சாயலில் பிடிபட்ட வினோத மீன்..! வைரலாகும் புகைப்படம்.!

Summary:

Fish have lips and teeth like human photo goes viral

இந்த உலகம் மிகவும் வித்தியாசமானது, வினோதமானது என்றே கூறலாம். அதற்கு பல்வேறு காரணங்களும் உண்டு. பல நேரங்களில் பல்வேறு வினோதமான சம்பவங்கள் அதை நமக்கு உணர்த்திக்கொண்டுதான் இருக்கிறது.

உதாரணத்திற்கு மனித தோற்றம் கொண்ட கன்றுக்குட்டி, புறா தோற்றம் கொண்ட மீன், நடந்துசெல்லும் மீன் இப்படி பலவிதமான சம்பவங்கள் இந்த உலகின் ஏதாவது [ஒரு இடத்தில் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

அந்த வகையில் மனிதனின் முகம் போல் தோற்றம் கொண்ட அதிசய மீன் ஒன்றின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. மனித முகச்சாயலில் உள்ள இந்த மீன் மலேசியாவில் பிடிப்பட்டு அனைவரையும் ஆச்சரியக் கடலில் மூழ்கடித்து உள்ளது.

இந்த மீன் பார்ப்பதற்கு மனிதர்களை போன்று மேல் உதடு, கீழ் உதடு, பற்களை பெற்றுள்ளது. இந்த புகைப்படத்தை ட்விட்டர் பயனாளர் ஒருவர் தனது பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


Advertisement