
First corona virus vaccine developed by Russia
ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்துக்கு ரஷ்ய சுகாதாரத்துறை ஒப்புதல் அளித்துள்ளதாக அந்நாட்டு அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா வைஸிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, சீனா போன்ற பல நாடுகள் முயற்சித்துவருகிறது. அதேநேரம் 20 தடுப்பூசிகள் மிகவும் முக்கிய பரிசோதனையில் உள்ளது.
இந்நிலையில் உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடித்தது நாங்கள்தான் எனவும், மனிதர்களிடையே செலுத்தி சோதனை செய்ததில் தங்களின் தடுப்பு மருந்து மிகவும் பாதுகாப்பானது என தெரியவந்ததாகவும் ரஷ்யா கடந்த மாதம் அறிவித்திருந்தது. இதனை அடுத்து வரும் அக்டோபர் மாதம் முதல் ரஷ்யா முழுவதும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் எனவும் அந்நாட்டு தெரிவித்திருந்தது.
அறிவியல் மற்றும் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல், நாங்கள்தான் முதல் தடுப்பூசியை கண்டுபிடித்தோம் என்ற கவுரவத்திற்காக ரஷ்யா அவசர அவசரமாக தடுப்பூசியை அறிவிப்பதாகவும், இதனால் பல்வேறு பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளதாகவும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் எச்சரித்தனர்.
ஆனாலும், தாங்கள் கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசிக்கு ரஷ்ய சுகாதாரத்துறை ஒப்புதல் அளித்துள்ளதாகவும், தனது மகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் ரஷ்யா அதிபர் புடின் தெரிவித்துள்ளார். மேலும் இந்த தடுப்பு மருந்தின் பெயர் மற்றும் விலை பற்றிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும், விரைவில் அதிகளவில் உற்பத்தி செய்து விநியோகம் செய்யப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement