பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரியான கணவர்.! முதல் நாளே நடிகை சுஜா வருணி போட்ட பதிவு.!
தீராத பணப் பிரச்சினையால் வந்த வினை... தந்தையே மகனுக்கு எமனான சோகம்.!
இலங்கையில் பணப்பிரச்சனை காரணமாக தந்தையே அவரது மகனை குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் தந்தையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கை குருநாகல் பகுதியைச் சேர்ந்த தந்தை மற்றும் மகனிடையே பணப்பிரச்சினை இருந்து வந்திருக்கிறது. இது தொடர்பாக அடிக்கடி இருவரும் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவ்வளவு நாளும் வாய் தகராறு ஆக இருந்த பிரச்சனை சம்பவ தினத்தன்று கைகலப்பாக மாறியிருக்கிறது.
அப்போது ஆத்திரமடைந்த 45 வயது தந்தை கூரான ஆயுதம் ஒன்றினால் தனது 23 வயது மகனை குத்தி படுகொலை செய்திருக்கிறார். கொல்லப்பட்ட நபர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார்.
இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கொலை செய்யப்பட்டவரின் பிரேதத்தை உடற்கூறாய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கொலை செய்த தந்தையை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.