அதிர்ச்சி! தேவாலயத்தில் பாடுப்பட்ட சிலுவை சரிந்து விழுந்து பாதிரியார் பரிதாப பலி..! நேரலை வழிபாட்டில் நடந்த கொடுமை.... பகீர் வீடியோ..!!!
ஈக்வடார் நாட்டின் குவாயாகில் நகரில் உள்ள தேவாலயத்தில், நேரலை திருப்பலியின்போது பிரம்மாண்ட மரச் சிலுவை சரிந்து விழுந்ததில் பாதிரியார் உயிரிழந்தார். அக்டோபர் 17-ம் தேதி நடந்த இந்த விபத்து, வழிபாடு நேரலையாக ஒளிபரப்பப்பட்டபோது பதிவாகியுள்ளது. பாதிரியாரின் மறைவுக்கு தேவாலய நிர்வாகம் இரங்கல் தெரிவித்துள்ளது.
நேரலை திருப்பலியின்போது நிகழ்ந்த விபத்து
குவாயாகில் நகரில் உள்ள ‘நுவெஸ்ட்ரா செனோரா டெல் பெர்பெது சொக்கோரோ’ தேவாலயத்தில் பாதிரியார் பாட்ரிகோ ஆல்பிரடோ சான்செஸ் மோலினாரி திருப்பலி நடத்திக் கொண்டிருந்தார். வழிபாடு நேரலையாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தபோது, சுவரில் பொருத்தப்பட்டிருந்த பெரிய மரச் சிலுவை திடீரெனக் கழன்று கீழே விழுந்தது.
இதையும் படிங்க: மகளை கொன்றுவிட்டு அவசர உதவி எண்ணை அழைத்த தாய்! நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்..!!!
சிலுவை விழுந்ததில் பாதிரியார் உயிரிழப்பு
பலத்த சத்தத்துடன் சரிந்து விழுந்த சிலுவை பாதிரியார் மீது மோதியதில் அவர் படுகாயமடைந்தார். இந்த விபத்தில் அவர் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது . வழிபாட்டின்போது நடந்த இந்த எதிர்பாராத சம்பவம் அங்கிருந்தவர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ
விபத்து நேரலையில் பதிவானதால், அதுதொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இதற்கிடையே, பாதிரியாரின் மறைவுக்கு குவாயாகில் பேராயம் அதிகாரப்பூர்வமாக இரங்கல் தெரிவித்துள்ளது. சிலுவை எதனால் கழன்று விழுந்தது என்பது குறித்து கூடுதல் விவரங்கள் வெளியாகவில்லை.
#Guayaquil
— Minuto & Medio (@MinMedio) October 18, 2026
Mientras se encontraba dando misa en sus redes sociales, el sacerdote, Patricio Sánchez, perdió la vida al ser impactado por una cruz de madera pic.twitter.com/7OCt25irbw
இதையும் படிங்க: இப்படி ஒரு சம்பவமா..? காதலியைச் சந்திக்க சொத்துக்களை விற்று... 1,900 கி.மீ. பயணம் செய்த காதலன்! இறுதியில் காத்திருந்த பேரதிர்ச்சி..!!!