உலகம் லைப் ஸ்டைல் Covid-19 Corono+

கொரோனாவுக்கு முடிவுகாலம் வரப்போகுது! பிறந்த அடுத்த நொடி குழந்தை செஞ்ச காரியம்! வைரலாகும் மருத்துவரின் பதிவு!

Summary:

புதிதாக பிறந்த குழந்தை ஒன்று பிறந்த சில நொடிகளில் மருத்துவரின் முகத்தில் இருந்த மாஸ்க்கை தனது கைகளால் நீக்கும் காட்சி தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

புதிதாக பிறந்த குழந்தை ஒன்று பிறந்த சில நொடிகளில் மருத்துவரின் முகத்தில் இருந்த மாஸ்க்கை தனது கைகளால் நீக்கும் காட்சி தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

கொரோனா என்னும் கொடிய வைஸினால் இந்த உலகம் கடந்த பல மாதங்களாக கடும் போராட்டத்தை சந்தித்துவருகிறது. இந்த கொரோனாவுக்கு எப்போதுதான் ஒரு முடிவு வருமோ என நினைக்காதவர்கள் யாரும் இல்லை. அந்த அளவிற்கு உயிர்பலி மற்றும் இயல்பு வாழக்கையை புரட்டி போட்டுள்ளது இந்த கொரோனா வைரஸ்.

மேலும் கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க, மக்கள் அனைவரும் முகக்கவசம் அணியவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான இடங்களில் மக்கள் எப்போதும் முகக்கவசத்துடன்தான் இருக்கின்றனர். இந்நிலையில் துபாயில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பிறந்த பச்சிளம் பெண் குழந்தை ஒன்று பிரசவ வார்டில் பணியிலிருந்த மருத்துவரின் மாஸ்க்கை கழட்டியெறிய முயன்றுள்ள காட்சி வைரலாகவிருக்கிறது.

இந்த காட்சி புகைப்படமாக இணையத்தில் வெளியாகி தற்போது உலகம் முழுவதும் வைரலாகிவருகிறது. இந்த புகைப்படம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள அந்த மருத்துவர், ''நாம் எல்லோரும் மாஸ்க்கிற்கு விடை கொடுக்கும் நேரம் வெகு தொலைவில் இல்லை என்பதற்கான சிக்னல் கிடைத்துள்ளது'' என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.


Advertisement