காரில் இருந்து வெளியே வர நாய் செய்த தில்லாலங்கடி வேலை..! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

காரில் இருந்து வெளியே வர நாய் செய்த தில்லாலங்கடி வேலை..! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!


Dog press horn continuously video goes viral

ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த ஸ்டீல் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், சாலை ஓரமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் ஒன்றில் இரண்டு நாய்கள் அடைத்துவைக்கப்பட்டுள்ளது. அந்த இரண்டு நாய்களில் ஒரு நாய் ஓட்டுனரின் இருக்கையில் வந்து அமர்கிறது.

பின்னர், கார் கதவை திறந்து தன்னை வெளியே விட வேண்டும் என்பதற்காக தொடர்ந்து காரின் ஹாரனை அடித்து ஒலி எழுப்புகிறது. தொடர்ந்து நாய் ஹாரன் அடிப்பதை பார்த்த காரின் உரிமையாளர் வேகமாக வந்து காரி கதவை திறந்துவிடுகிறார்.

காரின் கதவு திறந்ததும் அந்த நாய் அமைதியாக காரை விட்டு வெளியே வருகிறது. தன்னை வெளியே விட வேண்டும் என்பதற்காக அந்த நாய் செய்துள்ள செயல் இணையத்தில் வீடியோவாக வெளியாகி உலகம் முழுவதும் வைரலாகிவருகிறது. இதோ அந்த வீடியோ.