இறுதிசடங்கில் திடீரென கண்விழித்த சிறுமி.. அடுத்து நடந்த அதிர வைக்கும் சம்பவம்!

இறுதிசடங்கில் திடீரென கண்விழித்த சிறுமி.. அடுத்து நடந்த அதிர வைக்கும் சம்பவம்!


Death child suddenly open his eyes

இந்தோனேஷியாவை சேர்ந்தவர் 12 வயது சிறுமி. அந்த சிறுமி வெகு நாட்களாக திராத நீரழிவு நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மாத கடைசியில் சிறுமியின் உடல் நிலை மோசமானதை அடுத்து மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர் சிறுமியின் பெற்றோர்.

ஆனால் அந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அதனையடுத்து சிறுமிக்கு இறுதி சடங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அப்போது சிறுமியின் உடலை நீரில் குளிப்பாட்டியுள்ளனர். அந்நேரத்தில் திடீரென சிறுமி கண்விழித்துள்ளார். 

Death child

இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சென்ற ஒரு மணி நேரத்திலேயே மீண்டும் சிறுமி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மருத்துவர்கள் கூறுகையில், இது போன்ற சம்பவம் ஹைபர்கேமியாவால் நிகழ்கிறது. அதாவது இரத்தத்தில் அதிக அளவு பொட்டாசியம் இருக்கும்போது இப்படி நிகழ்கிறது  எனத் தெரிவித்துள்ளனர்.