திருமணமான 2 ஆண்டு இளம் தம்பதிகள்! மாதம் 1.7 லட்சம் சம்பளம் வாங்கியும்... மிச்சம் வெறும் 2520 ரூபாய் தானாம்! அப்படி என்னதான் செலவு... அதை பார்த்து மிரண்ட நெட்டிசன்கள்!!!
திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆன இளம் தம்பதி ஒருவர், தங்களது மாதாந்திர வரவு-செலவுக் கணக்கை முதன்முறையாக முழுமையாக ஆய்வு செய்தபோது அதிர்ச்சியடைந்துள்ளனர். மாதம் ரூ.1.70 லட்சம் வருமானம் இருந்தும், கையில் எதுவும் மிஞ்சாமல் வாழ்க்கை நகர்வதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். சம்பளம் வந்த சில நாட்களிலேயே பணம் எங்கு செல்கிறது என்பதே தெரியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.
வருமானத்தின் பாதிக்கும் மேல் EMI செலவு
தகவலின்படி, தம்பதியின் மாத வருமானம் ரூ.1.70 லட்சம். இதில் ரூ.86,000 தொகை பல்வேறு கடன்களின் EMI கட்டணங்களுக்கே செல்கிறது. பெற்றோரின் பழைய கடனை அடைப்பதற்காக வாங்கிய ரூ.30 லட்சம் பெர்சனல் லோன், பைக் லோன், கல்விக் கடன் மற்றும் மொபைல் போன் இஎம்ஐ உள்ளிட்டவை இதில் அடங்குகின்றன.
இதுபோக வீட்டு வாடகை, மளிகைப் பொருட்கள், மின்சார கட்டணம் உள்ளிட்ட அத்தியாவசிய குடும்பச் செலவுகளுக்கு ரூ.53,500 செலவாகிறது. மேலும் தனிப்பட்ட தேவைகள் மற்றும் பிற செலவுகளுக்காக ரூ.28,000 வரை செலவிடப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காலையில் தூங்கி எழுந்ததும் காதலனின் குரல் மட்டும் கேக்கல...ஆனால் மத்தவங்க பேசுறது கேக்குது! இப்படி ஒரு சம்பவமா.?
கையில் மிஞ்சியது ரூ.2,520 மட்டுமே
அனைத்து செலவுகளும் முடிந்த பிறகு மாத இறுதியில் ரூ.2,520 மட்டுமே கையில் மிஞ்சுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் எதிர்காலத் திட்டங்கள், குழந்தையின் கல்வி மற்றும் Emergency Fund உருவாக்குவது போன்ற முக்கிய தேவைகளுக்காக சேமிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
நெட்டிசன்களின் ஆலோசனை என்ன?
இந்த நிதிநிலையை சமூக வலைதளங்களில் பகிர்ந்ததைத் தொடர்ந்து பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக ஆடம்பரச் செலவுகள் மற்றும் தேவையற்ற சுற்றுலா செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், அதிக வட்டி சுமையை ஏற்படுத்தும் பெர்சனல் லோனை விரைவாக அடைப்பதற்கான திட்டத்தை முதலில் வகுக்க வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
மாத வருமானம் உயர்வாக இருந்தாலும், கடன் சுமை மற்றும் கட்டுப்பாடற்ற செலவுகள் காரணமாக சேமிப்பு இல்லாத நிலை உருவாகும் என்பதற்கான எடுத்துக்காட்டாக இந்த தம்பதியின் அனுபவம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
இதையும் படிங்க: இன்ப அதிர்ச்சியில் முதல்வர் விஜய்! வங்கி கணக்கில் வந்த பணம்..... அரசு கடனை அடைக்க அதிரடி உதவி!!!