மாரி செல்வராஜின் 'வாழை' பட சிறுவனின் +2 mark வைரல்.! நடிப்பிலும் படிப்பிலும் அசத்திய பொன்வேல்.!
காலையில் தூங்கி எழுந்ததும் காதலனின் குரல் மட்டும் கேக்கல...ஆனால் மத்தவங்க பேசுறது கேக்குது! இப்படி ஒரு சம்பவமா.?
சீனாவில் பெண் ஒருவருக்கு ஏற்பட்டுள்ள அரிய வகை செவித்திறன் குறைபாடு மருத்துவர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது. ஒரு நாள் காலை தூங்கி எழுந்தபோது தனது காதலனின் குரல் மட்டும் கேட்கவில்லை என அந்தப் பெண் அதிர்ச்சியுடன் தெரிவித்தார். ஆனால் பெண்களின் குரலும் மற்ற சாதாரண சத்தங்களும் தெளிவாகக் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சென் என அழைக்கப்படும் அந்தப் பெண் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை மேற்கொண்டார். அதில், அவர் ரிவர்ஸ்-ஸ்லோப் செவித்திறன் குறைபாடு எனப்படும் அரிய பாதிப்பால் அவதிப்படுவது தெரியவந்தது.
இதையும் படிங்க: மொத்த பற்கள் 32 அல்ல 42.... கின்னஸ் உலக சாதனை படைத்த 33 வயது வாலிபர்! மருத்துவ உலகையே அதிரவைத்த நிகழ்வு .!!
ஆண்களின் குரல் மட்டும் கேட்காத நிலை
மருத்துவர்களின் தகவலின்படி, இந்த நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு குறைந்த அதிர்வெண் கொண்ட ஒலிகள் சரியாகக் கேட்காது. குறிப்பாக ஆண்களின் கனத்த குரல், இடி முழக்கம், இசைக்கருவிகளில் வரும் ‘Bass’ ஒலி போன்றவை காதுகளில் பதிவாகாது.
வழக்கமாக ஏற்படும் செவித்திறன் இழப்பில் அதிக அதிர்வெண் கொண்ட சத்தங்களே முதலில் பாதிக்கப்படும். ஆனால் இந்த நோயில் அதற்கு நேர்மாறாக குறைந்த அதிர்வெண் ஒலிகளே கேட்காமல் போவது மருத்துவ ரீதியாக வினோதமானதாக பார்க்கப்படுகிறது.
மன அழுத்தம் காரணமா?
தகவலின்படி, அதிகமான மன அழுத்தம் மற்றும் போதிய தூக்கமின்மை போன்றவை இந்த பாதிப்பிற்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர். கடந்த சில நாட்களாக அவர் அதிக வேலைப்பளுவில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
முழுமையாக குணப்படுத்த முடியாத நோய்
இந்த வகை செவித்திறன் குறைபாடு தற்போது முழுமையாக குணப்படுத்தக்கூடிய நிலை இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், சரியான ஓய்வு மற்றும் வாழ்க்கை முறையில் மாற்றங்கள் மூலம் பாதிப்பை கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: BREAKING: ஷாக் நியூஷ்! தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரபல தமிழ் காமெடி நடிகருக்கு மாரடைப்பு!!!