உத்தரவை மீறிய கொரோனா நோயாளி..! அடுத்த நொடியே சுட்டு கொலை.! பீதியை கிளப்பும் வடகொரியா.! - TamilSpark
TamilSpark Logo
உலகம் லைப் ஸ்டைல்

உத்தரவை மீறிய கொரோனா நோயாளி..! அடுத்த நொடியே சுட்டு கொலை.! பீதியை கிளப்பும் வடகொரியா.!

வடகொரியாவில் நடைபெறும் சம்பவங்கள் பெரும்பாலும் உலகையே அதிர்ச்சியடையவைக்கும் விதமாகத்தான் இருக்கும். அந்த நாட்டின் நடைமுறைகளும், சட்டதிட்டங்களும் கேட்போரையே திகிலூட்ட செய்யும். இவை அனைத்தும் நமக்கு பெரிய விஷயமாக இருந்தாலும், அந்நாட்டு மக்களுக்கு பழகிப்போன ஒன்றுதான்.

இந்நிலையில் வடகொரியாவை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் வேலை விஷயமாக சீன சென்று நாடு திரும்பியுள்ளார். அந்த வர்தகருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்கலாம் என சந்தேகித்த வடகொரியா அதிகாரிகள் அவரை தனிமை படுத்தி கண்காணித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் எதேச்சையாக அந்த வர்த்தகர் பொது குளியலறைக்கு சென்று குளித்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், அந்த வர்த்தகரை கைது செய்து, சிறிது நேரத்தில் எந்த ஒரு விசாரணையும் இன்றி சுட்டு கொலை செய்துள்ளன்னர்.

இந்த சம்பவம் உலக நாட்களுடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo